Cinema History
நடிகவேள் எம்.ஆர் ராதாவின் வாழ்க்கையை மாற்றி போட்டது ஒரு நாடகம்தான்… அது மட்டும் இல்லைனா!..
Actor MR Radha :நாடகங்கள் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் சினிமா ரசிகர்களின் எண்ணங்களும் மாறுபட்டு இருந்தன. சோக முடிவு கொண்ட நாடகங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருந்தது.
அதனால்தான் திரைப்படத்திற்கு நாடகத் துறை தாவும்பொழுதும் தொடர்ந்து சோக திரைப்படங்களையே எடுத்து வந்தனர். டிஆர் மாதிரியான சில இயக்குனர்கள் சோக முடிவு படங்களை எடுத்தே பெரும் வெற்றியை கொடுத்திருந்தனர். இந்த காலக்கட்டத்தில் நாடகத் துறையில் பெரிதாக கால் பதித்தவர் நடிகர் எம்.ஆர் ராதா.
எம்.ஆர் ராதா நாடகத்துறையில் இருக்கும் பொழுது இந்த விஷயத்தை அறிந்திருந்தார் அதாவது சோக கிளைமாக்ஸ் கொண்ட ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு மாதிரியான நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்திருந்தார் எம்.ஆர் ராதா.
எனவே தமிழிலும் ஒரு சோக கிளைமாக்ஸ் கொண்ட காதல் கதையை நாடகமாக்க வேண்டும் என்பது எம்.ஆர் ராதாவின் ஆசையாக இருந்தது. அதற்காக அவர் இழந்த காதல் என்கிற ஒரு நாடகத்தை உருவாக்கினார்.
இந்த நாடகத்தின் இறுதி காட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர் நம்பினார். அதேபோல இந்த நாடகத்தை சேலம் நியூ ஓரியண்டல் தியேட்டரில் நாடகமாக முதன் முதலாக அரங்கேற்றினர். அந்த நாடகத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து தினமும் கொட்டகையில் காட்சிகள் நிறைந்து வந்ததால் கிட்டத்தட்ட ஆறு மாதம் தொடர்ந்து இழந்த காதல் நாடகத்தை வெவ்வேறு ஊர்களில் நாடகமாக போட்டு வந்தார் எம் ஆர் ராதா. எம் ஆர் ராதாவின் நடிப்பை வெளி உலகத்திற்கு பிரபலமாகியது இந்த நாடகம் தான் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ் நாடக உலகில் ஆறு மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஒரே நாடகம் இழந்த காதல் நாடகம்தான் என்று கூறப்படுகிறது.
இதில் எம்.ஆர் ராதா வில்லனாக நடித்திருந்தார். பின்னாட்களில் அவர் சினிமாவில் வில்லனாக அறிமுகமாவதற்கும் இந்த நாடகமே உதவியுள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்