நெஜமாவே மேல காரை ஏத்திட்டாங்க!.. விஜய் படப்பிடிப்பில் நடிகருக்கு நடந்த விபத்து!..

தமிழ் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் திரைப்படங்கள் என்றாலே அதில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு அதிகமான சண்டை காட்சிகளை கொண்டிருக்கும்.

முன்பெல்லாம் விஜய் படங்கள் இப்படி கிடையாது. ஆரம்பத்தில் தொடர்ந்து காதல் படங்களில்தான் நடித்து வந்தார் விஜய். ஆனால் பிறகு ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியப்போது அனைத்து நடிகர்களுமே ஆக்‌ஷன் நடிகர்களாக மாறினர்.

இந்த நிலையில் பல ஆக்‌ஷன் காட்சிகளில் விஜய்க்கே அடிகள் எல்லாம் விழுந்திருக்கின்றன. அதே போல தலைவா திரைப்படத்தின்போது நடிகர் சுப்பு பஞ்சுவிற்கு ஒரு பெரும் விபத்து நடந்துள்ளது. நடிகர் சுப்பு பஞ்சு, பஞ்சு அருணாச்சலத்தின் மகன் ஆவார்.

thalapathy-vijay1
thalapathy-vijay1
Social Media Bar

நிறைய திரைப்படங்களில் இவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தலைவா படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது அதில் ஒரு காட்சியில் இவர் மீது கார் மோதுவதாக காட்சி இருக்கும். கார் மோதியவுடன் இவர் சில அடிகள் தள்ளி விழ வேண்டும்.

ஆனால் துர்திருஷ்டவசமாக அந்த கார் வேகமாக வந்து மோதியது. இதனால் சுப்புவிற்கு இடுப்பில் நல்ல அடி மேலும் அவரது தலை கார் கண்ணாடியில் மோதி அந்த கண்ணாடி உடைந்து அவர் காருக்குள் விழுந்துவிட்டார். இந்த சம்பவத்தை பார்த்து படப்பிடிப்பு தளமே ஆடிப்போய்விட்டது.

விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த விஜய் அன்றைய நாள் முழுவதும் அவர்தான் சுப்புவை கவனமாக பார்த்துக்கொண்டாராம். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் சுப்பு.