கண்ணு திறந்தே இருந்தது! –  மருத நாயகம் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டையே அலற விட்ட கமல்ஹாசன்!

 தமிழில் தனித்துவமான நடிகர்களில் முக்கியமானவர் கமலஹாசன். நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்களில் பாடல்களை பாடுவது, படங்களை இயக்குவது,  தயாரிப்பது என பல விஷயங்களை செய்யக்கூடியவர் இவர். எனவே எப்போதும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரைத்துறையில் ஒரு பெரும் மதிப்பு உண்டு.

Social Media Bar

 கமல்ஹாசன் நடித்த சில திரைப்படங்கள் இறுதிவரை திரையில் வெளியாகாமலே போனது.  அந்த வரிசையில் மருதநாயகம் ஒரு முக்கியமான திரைப்படம் ஆகும்.  இந்தியா பிரிட்டிஷார் கையில் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு வீரனின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மருதநாயகம்.

ஆனால் அந்தத் திரைப்படம் குறித்து அதிகமான சர்ச்சைகள் ஏற்பட்டதால் இறுதிவரை அந்த படம் வெளியாகாமலே போனது.  அந்தப் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் அப்பொழுதே முடிந்திருந்தன. படத்தின் இறுதி காட்சிகளில் மருதநாயகத்தின் தலையை துண்டிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.

 அதற்காக கமலின் முக உருவத்தை காப்பி எடுத்து அதை வைத்து அவரது தலையை உருவாக்க வேண்டும்.  எனவே பட குழுவினர் மோல்டு முறையை பயன்படுத்தி அவரது தலையை உருவாக்கினர்.  இதற்காக மோல்டு கெமிக்கலை கமல்ஹாசனின் முகத்தில் ஊற்றி அவர் முகத்தின் அச்சை அப்படியே எடுத்தனர்.  இப்படி மோல்டு எடுக்கும் பொழுது கண்களை திறக்க கூடாது, வாய் பகுதியையும் திறக்க கூடாது என்று பல விதிமுறைகள் உண்டு.

 ஆனால் கமல்ஹாசனின் முகத்தை மோல்டு எடுத்த பிறகு அந்த மோல்டை பார்க்கும் போது அதில் கமலின் ஒரு கண் திறந்திருப்பது தெரிந்தது.   வெட்டப்பட்ட மருதநாயகத்தின் முகம் பார்ப்பதற்கு உண்மையானதாக தெரிய வேண்டும் என்பதற்காக கடினப்பட்டு அந்த வேலையை செய்திருந்தார் கமல்.

 இந்த விஷயத்தை நடிகர் கார்த்தி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். மேலும் கமல்ஹாசன் ஒரு பல்துறை நிபுணர் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.