Latest News
ஒரு வருஷம் ஓட்டல்ல அந்த வேலையெல்லாம் பார்த்தோம்.. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நாசரின் வாழ்க்கை என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாசர். துவக்கத்தில் நாசர் வில்லனாக வேண்டும் என சினிமாவிற்கு வரவில்லை. ஆனால் அவரது முகத்திற்கு அவருக்கு வில்லனாக நடிக்கதான் வாய்ப்புகள் கிடைத்தன.
இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட கூடாது என்பதற்காக வில்லன் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்தார் நாசர். அது அவருக்கு வரவேற்பையும் பெற்று கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் வில்லனாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார்.
வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி நாசரால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்ய முடியும். இதனாலேயே கமல்ஹாசன் தனது திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நாசரின் வாழ்க்கை என்பது கொஞ்சம் மோசமானதாகதான் இருந்தது.
இதுக்குறித்து அவரது நண்பரும் சினிமா நடிகருமான தலைவாசல் விஜய் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது நானும் நாசரும் சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்த காலக்கட்டத்தில் வாய்ப்பு கேட்கும் இடங்களில் எல்லாம் எங்களின் புகைப்படங்களை கேட்பார்கள்.
எனவே நாங்கள் அனைவருக்கும் புகைப்படம் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் அப்போது புகைப்படம் எடுக்க கூட எங்களிடம் பணம் இல்லை. எனவே அப்போது சென்னையிலேயே ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து அங்கு வெயிட்டராக பணிப்புரிந்தோம். அங்கு மதியம் 3 மணிவரை வேலை இருக்கும்.
மிச்ச நேரங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தோம் என்கிறார் தலைவாசல் விஜய். வாரிசு நடிகர்கள் எல்லாம் வெகு எளிதாக சினிமாவிற்கு வந்துவிடுகின்றனர். ஆனால் நாசர் மாதிரியான நடிகர்கள் எல்லாம் இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகுதான் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது.