Connect with us

மகனுக்காக ஓவர் நைட்ல அந்த முடிவை எடுத்தோம்..! இந்தியாவை விட்டு போக இதுதான் காரணம்..! உண்மையை கூறிய நடிகர் நெப்போலியன்..!

nepolean and son

Tamil Cinema News

மகனுக்காக ஓவர் நைட்ல அந்த முடிவை எடுத்தோம்..! இந்தியாவை விட்டு போக இதுதான் காரணம்..! உண்மையை கூறிய நடிகர் நெப்போலியன்..!

Actor Napoleon is the most prominent actor in Tamil cinema. Recently his son Dhanush got married. He said in an interview about this marriage

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் ஆவார். அதேபோல அரசியலிலும் கால் பதித்து நல்ல நிலையை அடைந்திருந்தார்.

அப்படியெல்லாம் இருந்த நெப்போலியன் இப்பொழுது அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கே தனது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியன் சமீபத்தில்தான் அவரது முதல் மகனான தனுஷின் திருமணம் கோலாகலமாக ஜப்பானில் நடைபெற்றது.

அதனை குறித்து நிறைய பேட்டிகள் கூட நெப்போலியன் கொடுத்திருந்தார் இந்த நிலையில் எதற்காக நெப்போலியன் இவ்வளவு விஷயங்களை விட்டுவிட்டு அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார் என்பது பலவித கேள்வியாக இருந்தது.

இதற்கு நெப்போலியன் பேட்டியில் பதில் அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது ஒருமுறை சிகிச்சைக்காக எனது மகனை அமெரிக்காவிற்கு அழைத்து சென்றோம். அவனுக்கு அமெரிக்கா மிகவும் பிடித்து விட்டது.

உண்மையை சொன்ன நெப்போலியன்:

மேலும் அவன் கூறும் பொழுது இந்தியாவில் என்னை பார்க்கும் நபர்கள் எல்லாருமே ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் என்னை யாரும் அப்படி பார்ப்பது கிடையாது. அதனால் அமெரிக்கா போய் விடலாம் என்று கூறினார் தனுஷ்.

அதே போல இந்தியாவில் சூப்பர் மார்க்கெட்டுகள் திரையரங்குகள் சாலைகள் என்று எல்லா இடமும் மாற்றுத்திறனாளிகளுக்கானதாக இல்லை மற்றவர்கள் செல்வதற்கு உகந்ததாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் இந்த இடங்களுக்கு எல்லாம் செல்வது கடினம் என்கிற நிலை இருக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை அதனால் அவனுக்கு அமெரிக்கா நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் அப்பொழுது நான் பிரபல நடிகராக இருந்தேன் மேலும் அமைச்சராகவும் இருந்தேன். இது எல்லாவற்றையும் நானும் விட்டுவிட்டு வரவேண்டும் என்கிற நிலை இருந்தது.

பிறகு நான் யோசித்து விட்டேன் என் மகனுக்காக இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு சென்றேன் என்று கூறியிருக்கிறார் நெப்போலியன்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top