Sunday, July 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
prasanth

தியாகராஜன் மோசமானவன்னு அவங்க சொல்ல இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் பிரசாந்த்!.

by Esai
August 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Prashanth: ஒரு சில நடிகர்களின் படம் என்றால் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் அந்த அளவிற்கு அந்த நடிகர் தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்திருப்பார். மேலும் ஒரு நடிகருக்கு அடுத்தடுத்து படங்கள் எல்லாம் வெற்றி பெற்றால் அந்த நடிகர் தான் அடுத்த முன்னணி நடிகராக வலம் வருவார்.

அந்த வகையில் தற்பொழுது இருக்கும் முன்னணி நடிகரான விஜய். அஜித் போன்ற நடிகர்களுக்கு ஒரு காலகட்டத்தில் போட்டியாக அமைந்த ஒரு நடிகர் என்றால் அது நடிகர் பிரசாந்த்.

அடுத்தடுத்து ஹிட்டான படங்களை கொடுத்த அவர் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தார். சொல்லப்போனால் அடுத்த தலைமுறைக்கு இவர் தான் ஹீரோ என்ற அளவிற்கு இவரின் அடுத்தடுத்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

ஆனால் சில காரணங்களால் பிரசாந்த் ஒரு காலகட்டத்திற்கு மேல் சினிமாவில் நடிக்க வரவில்லை. அதற்கு பலரும் பல காரணங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது அவர் சேனல் ஒன்றுக்கு தன்னுடைய அப்பா பற்றிய ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நடிகர் பிரசாந்த்

ஒரு காலத்தில் கோலிவுட்டின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பெற்றவர் நடிகர் பிரசாந்த். இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான தியாகராஜனின் மகன் ஆவார். ஆனால் அவரின் தந்தையின் அடையாளம் இல்லாமல் அவருடைய நடிப்பு திறமையை மட்டும் வைத்து டாப் ஸ்டார் என்ற உச்சத்தை அடைந்தார் நடிகர் பிரசாந்த்.

இவர் தன்னுடைய 17 ஆவது வயதில் தமிழ் படமான வைகாசி பொறந்தாச்சு என்னும் படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு செம்பருத்தி என்ற மற்றொரு படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படமும் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு திருடா திருடா என்ற படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவ்வாறு வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் பிரசாந்த் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் படைப்பான ஜீன்ஸ் திரைப்படத்தின் மூலம் மாபெரும் உச்சத்தை தொட்டார். ஜீன்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட பல வாரங்கள் ஓடி வசூல் சாதனை புரிந்தது.

prasanth

இவ்வாறு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்த பிரசாந்த் தன்னுடைய திருமண வாழ்க்கையின் மூலம் சினிமா வாய்ப்பை இழந்தார். இவர் கிரகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டனர். இதனால் குடும்ப பிரச்சினைகள் காரணமாக சிறிது காலம் சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார் பிரசாந்த்.

அதன் பிறகு அவரின் தந்தை எழுதி இயக்கிய மம்பட்டியான் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் அவருக்கு சரியாக அமையவில்லை. அடுத்ததாக நடித்த சாகசம் திரைப்படமும் வெற்றி பெறவில்லை. இவ்வாறு டாப் ஸ்டார் ஆக இருந்த பிரசாந்த் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்தார். தற்பொழுது விஜயின் கோட் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த்.

என் அப்பாவை அனைவரும் மோசமானவன் என்று கூறுவதற்கு காரணம் இதுதான்

தற்பொழுது ஒரு சேனல் ஒன்றில் பேட்டியில் கலந்து கொண்ட பிரசாந்த் அவரின் அப்பாவை பற்றிய ஒரு முக்கிய தகவலை கூறி இருக்கிறார். அவரிடம் படங்களை தேர்வு செய்வது நீங்களா அல்லது உங்கள் தந்தையா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு படத்தை தேர்வு செய்வது முழுவதும் நான் மட்டுமே தான். என் அப்பாவிடம் நான் கதையைக் கேட்டு முடித்த பிறகு எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டால், அவர் உடனே இயக்குனரிடம் சென்று பிரசாந்திற்கு படம் ஓகேதான். ஆனால் எனக்கு தான் கதை பிடிக்கவில்லை என அவர் கூறிவிட்டு வந்து விடுவார்.

prasanth

இதனால்தான் அனைவரும் பிரசாந்த் நல்லவர் தான். ஆனால் அவர் அப்பா தான் படம் பிடிக்கவில்லை என கூறுகிறார் என்று அப்பாவை தவறாக நினைத்திருப்பார்கள். இவ்வாறாக பிரசாந்த் தெரிவித்திருக்கிறார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags: Actor Prashanthtamil cinemaதமிழ் சினிமா
Previous Post

கவர்ச்சி நடிகையால் வாய்ப்பை இழந்த நக்மா!.. இந்த விஷயத்தில் கோட்டை விட்டுட்டீங்களே..

Next Post

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் ஆனாலும்… நடிகை ஓவியா ஓப்பன் டாக்!.

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
actress oviya

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் ஆனாலும்… நடிகை ஓவியா ஓப்பன் டாக்!.

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved