Cinema History
எம்.ஜி.ஆர் புறக்கணித்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த சிவாஜி!.. யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அங்கீகாரம் என்பது நடிகர்கள் மூலமாகவே கிடைக்கின்றன ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக சிலர் இருக்கின்றனர். அவர்கள் அங்கீகாரம் கொடுக்கும் நடிகைகள் சீக்கிரமாக பிரபலமாகி விடுகின்றனர்.
அப்படி ப்ளாக் அண்ட் வைட் சினிமா காலகட்டத்தில் பெரும் நடிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன்.அந்த காலகட்டத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் குமாரி சச்சு. சச்சு பல படங்களில் காமெடி கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
அதிகபட்சம் காமெடியன்களுக்கு ஜோடி கதாபாத்திரமாக இவர் நடிப்பார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சச்சு முதலில் ஏ.வி.எம் நிறுவனத்திற்காகதான் பணிபுரிந்து வந்தார். பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு கதாநாயகியாக வேண்டும் என நினைத்தார்.
ஆனால் ஏவிஎம் நிறுவனம் இன்னும் ஐந்து வருடம் கழித்து கதாநாயகியாக நடிக்கலாம் என்று கூறின.ர் அதற்கு ஒப்புக்கொள்ளாத சச்சு ஏ.வி.எம் ஐ விட்டு வெளியேறி எம்.ஜி.ஆரிடம் சென்று வாய்ப்பு கேட்டார். எம்.ஜி.ஆரும் பார்ப்பதற்கு நீ சின்ன பெண்ணாக இருக்கிறாய் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு கதாநாயகியாக நடிக்கலாம் என்று கூறி அனுப்பி விட்டார்.
அதன் பிறகு சிவாஜியிடம் சென்ற பொழுது சிவாஜி சச்சுவிற்கு வாய்ப்பு கொடுத்து கதாநாயகி ஆக்கி உள்ளார் இந்த விஷயத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் சச்சு.