நான் வளரணும்னு சிவகார்த்திகேயன் நினைக்கலையா? சூரி கொடுத்த பதில்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூரி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்து வந்த சூரி வெகு காலங்களுக்கு தொடர்ந்து காமெடி நடிகராகதான் இருந்து வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் இவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இருவரும் சேர்ந்தே நடித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் சூரிக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் சூரி.
உலக அளவில் விடுதலை திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து சூரி நடித்த திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார். அந்த சமயத்தில் ஒரு வதந்தி பரவி வந்தது. அதாவது சிவகார்த்திகேயன் வேண்டும் என்றே கொட்டுக்காளி திரைப்படத்தில் சூரியை நடிக்க வைத்துள்ளார்.
அது ஒரு உலக சினிமா என்பதால் சூரியின் மார்க்கெட்டை அது குறைத்துவிடும் என்று சிவகார்த்திகேயன் இதை செய்துள்ளார் என்று பேச்சுக்கள் இருந்தன. அதற்கு சமீபத்தில் பதில் அளித்த சூரி கூறும்போது என் சினிமா வளர்ச்சியில் கொட்டுக்காளி திரைப்படத்திற்கும் முக்கிய பங்குண்டு.
எல்லோருமே ஒரே மாதிரி திரைப்படங்களை எடுத்தால் கொட்டுக்காளி மாதிரி திரைப்படங்களை யார் எடுப்பது என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சூரி.