Connect with us

பிடிக்காம நடிச்ச படம் அது… ஆனா தனுஷால் ஹிட்டு.. ஆச்சரியப்பட்ட விவேக்!..

Cinema History

பிடிக்காம நடிச்ச படம் அது… ஆனா தனுஷால் ஹிட்டு.. ஆச்சரியப்பட்ட விவேக்!..

cinepettai.com cinepettai.com

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் வெறும் நகைச்சுவை மட்டும் செய்யாமல் தனது நகைச்சுவையில் நல்ல நல்ல கருத்துக்களை கூற கூடியவர் நடிகர் விவேக். விஜய் அஜித்தில் துவங்கி பிரபலமான நடிகர்கள் அனைவருடனும் இவர் நடித்துள்ளார். அதுவும் அதிகபட்சம் அவர்களுடைய நண்பர் கதாபாத்திரத்தில்தான் விவேக் நடிப்பார்.

காதல் மன்னன் திரைப்படத்தில் துவங்கி ஜீவா நடித்து வெளியான தித்திக்குதே திரைப்படம் காலம் வரையிலும் கதாநாயகனுக்கு நண்பனாகவே நடித்து வந்தவர் விவேக்.

அவரது வயது அவரது முகத்தில் தெரியாமல் இருந்ததே இப்படி நடித்ததற்கு காரணமாகும். அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது பல படங்களில் நான் பிடித்து நடித்துள்ளேன். ஆனால் ஒரு படத்தில் மட்டும் எனக்கு பிடிக்காமல் நடித்தேன் ஆனால் அந்த திரைப்படம் நடிகர் தனுஷால் பெரும் ஹிட் கொடுத்தது என்று கூறியுள்ளார் விவேக்.

தனுஷ் மற்றும் விவேக் சேர்ந்து நடித்த உத்தமபுத்திரன் திரைப்படம் தான் அது. தனுஷ் விவேக் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர் ஆனால் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் விவேக்கிற்கு அதிக வசனங்கள் இருக்காது.

பாதி படத்திற்கு மேல் அவருக்கு அதிக வசனங்களை இல்லாததால் அதிருப்தியில் இருந்தார் விவேக். இருந்தாலும் தனுஷ் சொன்னதற்காக அந்த திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படத்தின் காமெடிகள் வெகுவாக வரவேற்பை பெற்றது என்று அந்த படம் குறித்து விவேக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

POPULAR POSTS

rajinikanth
samuthrakani pa ranjith
rajinikanth
modi thiagaraja kumararaja
kamalhaasan gautham menon
vk ramasamy mgr
To Top