Connect with us

சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..

bigg boss 7 tamil

Bigg Boss Tamil

சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..

Social Media Bar

பொதுவாகவே ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சனை என வந்தால் நம் மக்கள் உடனே என்னவென்று வேடிக்கை பார்க்கவாவது அங்கு கூடி விடுவது வழக்கம். இதை ஒரு அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகும்போதும் அதற்கு அதிகப்படியான வரவேற்பு உருவாகி வரும். அந்த வகையில் இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 7 வெளிவர இருக்கிறது. இதில் யாரெல்லாம் பங்கேற்க்க உள்ளனர் என்கிற தகவல் ஓரளவு வெளியாகிவிட்டது. அதை இப்போது பார்க்கலாம்.

01.ஜோவிகா விஜயக்குமார்:

வனிதா விஜயக்குமாரின் மகள் ஜோவிகா விஜயக்குமார் ஆவார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் நிறைய ஃபாலோவர்ஸ் உண்டு. மேலும் இவர் சினிமாவிற்கு வரவும் ஆசைப்படுகிறாராம். எனவே அதற்கு பிக் பாஸ் ஒரு ஆரம்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

02.இந்த்ரஜா

இந்த்ரஜா பிரபலமான பாடகி ஆவார். பாடகி என்பதை தாண்டி தமிழ் தெலுங்கு படங்களில் பணிப்புரிந்துள்ளார். மேலும் ராஜாவின் பார்வையிலே, எங்கள் அண்ணா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

03.சரத் ராஜ்

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் சரத் ராஜ். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கும் கூட அங்கீகாரத்தை வழங்கியது. இவரும் பிக் பாஸ் 7 இல் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

04.ஷர்மிளா

ஒவ்வொரு முறையும் சமூகம் சார்ந்த ஒரு சாதரண மனிதரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதுண்டு. அந்த வகையில் தற்சமயம் கோயம்புத்தூரில் பெண் ஓட்டுநராக பணிப்புரிந்த ஷர்மிளாவை பிக்பாஸில் சேர்த்துள்ளனர்.

05.ரஞ்சித்

ஆரம்பத்தில் வேந்தர் டிவியில் செய்திகள் வாசித்து வந்தவர் ரஞ்சித். அதன் பிறகு சன் டிவி, பாலீமர் டிவி ஆகிய சேனல்களிலும் இவர் பணிப்புரிந்துள்ளார். ஓரளவு பிரபலமானவர் என்பதால் இவரும் பிக் பாஸ் 7 இல் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

06.உமா ரியாஸ்கான்

ஏற்கனவே ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர் உமா ரியாஸ்கான். தற்சமயம் பிக் பாஸ் 7 இல் பங்கேற்க உள்ளார்.

07.ரேக்கா நாயர்

சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவும், சர்ச்சைக்குள்ளானவராகவும் இருப்பவர் நடிகை ரேகா நாயர். இவர் பைரவி, வம்சம், பகல் நிலவு போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

08.அப்பாஸ்

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் அப்பாஸ். சினிமாவில் வீழ்ச்சி கண்ட பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தார். தற்சமயம் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.

09.அகில்

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகர் அகில். கல்லூரி படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் பிறகு பெரிதாக வாய்ப்பை பெறவில்லை. தற்சமயம் பிக் பாஸ் மூலமாக வரவேற்பை பெறலாம் என பிக் பாஸில் கலந்துக்கொள்ள உள்ளார்.

10.தர்ஷா குப்தா

விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அதன் பிறகு சினிமாவில் ருத்ரதாண்டவம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

11.ஸ்ரீதர்

ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் வெகுநாட்களாக டான்ஸ் மாஸ்டராக இருந்து வருகிறார். தற்சமயம் பிக் பாஸிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12.சந்தோஷ் ப்ரதாப்

சார்ப்பாட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட குக் வித் கோமாளிதான் சந்தோஷிற்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸிலும் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

13.மா கா பா ஆனந்த்

சிவகார்த்திகேயனுக்கு பிறகு விஜய் டிவியில் மிக பிரபலமான தொகுப்பாளராக மா கா பா ஆனந்த் இருக்கிறார். இவரும் இந்த முறை பிக் பாஸில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

14.ரவீனா

சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமானவர் ரவீனா. குக் வித் கோமாளியில் இவர் கோமாளியாக வந்தார். தற்சமயம் பிக்பாஸில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

15.மீரா சோப்ரா

இவர் தமிழில் கில்லாடி என்கிற திரைப்படத்தில் 2015 இல் நடித்தார். அதன் பிறகு ஹிந்திக்கு சென்றுவிட்டார்.தற்சமயம் மீண்டும் வரவேற்பை பெற பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்துக்கொள்ள உள்ளார்.

16.ரக்‌ஷன்

ரக்‌ஷன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஒரு ரசிக வட்டாரம் உள்ளது.

17.காக்கா முட்டை விக்னேஷ்:

காக்கா முட்டை விக்னேஷ் தமிழ் நடிகர் ஆவார். இவர் காக்கா முட்டை மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

18.அம்மு அபிராமி

தமிழ் திரைப்படங்களில் சிறுவர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அம்மு அபிராமி அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்சமயம் பிக் பாஸில் கலந்துக்கொள்ள உள்ளார்.

19.வி.ஜே பார்வதி

சமூக வலைத்தளங்களில் அதிகமாக அறியப்படுபவர்களில் வி.ஜே பார்வதி முக்கியமானவர். இவருக்கு அதிக ரசிக வட்டாரங்கள் உள்ளன.

20.சோனியா அகர்வால்

சினிமாவை விட்டு விலகியதால் சோனியா அகர்வால் பிக்பாஸிற்கு வரலாம் என பேச்சுக்கள் உள்ளன. ஆனால் இன்னும் அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

எனவே இவர்கள் எல்லாம் பிக்பாஸிற்குள் வரலாம் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top