நடிகைக்காக போட்டி போடும் எஸ்.கே சிம்பு.. இது என்ன புது பிரச்சனை..!

சீதாராமம் என்கிற திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அதிக புகழ் பெற்றவர் நடிகை மிர்னல் தாக்கூர். முதலில் பாலிவுட்டில் தான் வாய்ப்புகளை தேடி வந்தார் மிர்னல் தாக்கூர்.

தெலுங்கில் வெளியான ஜெர்சி என்கிற திரைப்படம் பாலிவுட் ரீமேக் செய்யப்பட்ட பொழுது அந்த திரைப்படத்தில் இவர் நடித்தார். அந்த படத்தின் கதைக்களம் இவருக்கு மிகவும் பிடித்துவிடவே தெலுங்கு சினிமாவிற்கு சென்று நடிக்கலாம் என்று தெலுங்கு பக்கம் வந்தார் மிர்னாள் தாக்கூர்.

இதுவரை அவர் தெலுங்கில் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

Social Media Bar

இந்த நிலையில் அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மிர்னாள் தாக்கூர் கதாநாயகியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது சிவகார்த்திகேயனின் எண்ணமாக இருக்கிறதாம்.

அதே சமயம் ஏற்கனவே சிம்புவும் நடிகை மிர்னாள் தாக்கூர் தன்னுடைய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் எனவே இந்த ஒரு நடிகைக்காக இப்பொழுது இரண்டு நடிகர்களுமே போட்டி போட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.