இந்த நிலையில் அவளை பார்த்தால் அவங்க அம்மா அப்பாவுக்கு வயிறு எரியாதா? இயக்குனர் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்!..
தமிழ் சினிமா கலைஞர்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமும் மரியாதையும் கொண்டவர் நடிகர் சிவாஜி கணேசன். எவ்வளவு பெரிய நடிகர் ஆனாலும் கூட நடிப்பின் மீது அவருக்கு இருந்த பக்தி குறையவே இல்லை. 200க்கு மேல் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சிவாஜி கணேசன் எந்த ஒரு படத்திற்கும் தாமதமாக படப்பிடிப்பிற்கு வந்ததே கிடையாது.
எப்போதுமே படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம் முன்பு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவாராம் சிவாஜி. அந்த அளவிற்கு நடிப்பின் மீது பக்தி கொண்டவர் சிவாஜி கணேசன். நடிகை நித்தியா ஒரு பேட்டியில் பேசும் பொழுது சிவாஜி படப்பிடிப்பில் மற்றவர்களுடன் எப்படி பழகுகிறார் என்பதை குறித்து பேசி இருந்தார்.
ஒரு படத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்பொழுது நித்யாவை சுடுகாட்டில் படுக்க வைத்து அவரின் மீது வறட்டிகளை அடுக்கி வைத்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இப்போது சிவாஜி கணேசன் இருந்ததால் நித்யாவை அப்படியே படுக்க வைத்துவிட்டு சிவாஜி கணேசனுக்கான காட்சிகளை எடுக்க துவங்கி விட்டனர்.
இதனால் கடுப்பான சிவாஜி கணேசன் ”நீ என்ன அவளை மலர் படுக்கையிலா படுக்க வைத்திருக்கிறாய். இந்த நிலையில் அவளை பார்த்தால் அவர்களது அம்மா அப்பாவிற்கு வயிறு எரியாதா?” சீக்கிரமாக அவளது காட்சிகளை முதலில் எடுத்து மூடி என்று கூறியுள்ளார் சிவாஜிகணேசன்.
அதுவரை காத்திருந்து பிறகு படப்பிடிப்பு முடிந்தவுடன் அவருக்கு எலுமிச்சை பூசணிக்காய் எல்லாம் சுற்றி தீட்டைக் கழித்துள்ளார் சிவாஜி கணேசன். பொதுவாக இறப்பு காட்சிகளுக்கு பிறகு இப்படி தீட்டு கழிப்பது சினிமாவில் வழக்கம்.
இவை அனைத்தையும் சிவாஜி கணேசனே செய்தார் என்று நித்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த அளவிற்கு தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மீதும் அன்பு கொண்டவர் சிவாஜி கணேசன்.