உடல் எடை குறைத்து ரீ எண்ட்ரி கொடுத்த நிவேதா தாமஸ்.. ஆளே மாறிட்டாரே..!
இளம் வயதிலேயே மலையாளம் தமிழ் இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனால் மலையாளம் தெலுங்கு தமிழ் என்று மூன்று மொழிகளிலும் ஒரு புகழ் பெற்ற நடிகராக இவர் இருந்து வருகிறார்.
முக்கியமாக தமிழில் கமல் ரஜினிகாந்த் என்ற இரண்டு பேரும் நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் நிவேதா தாமஸ். தர்பார் திரைப்படத்தின் போதே நிவேதா தாமஸின் உடல் எடை அதிகரித்து இருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளே அவருக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்து இருக்கிறார் நிவேதா தாமஸ்.