என்ன அந்த வார்த்தை சொல்லி திட்டினார் பாண்டியராஜன்.. படப்பிடிப்பில் நடந்த சண்டை..

ஒரு சில நடிகைகள் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் அனைவருக்கும் தெரிந்த நடிகையுமான, ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை சங்கீதா கிரிஷ்.

இவர் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகை ஆவார். தற்போது இவர் இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜனை பற்றி கூறியிருக்கும் தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சங்கீதா கிரிஷ்

நடிகை சங்கீதா நடன கலைஞர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராவார். இந்நிலையில் அவர் தமிழில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் தெலுங்கில் இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்று இருக்கிறார். மேலும் மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

மலையாளத் திரையுலகில் இவரை ரசிகா என்று அழைக்கிறார்கள். 90s களில் அறிமுகமான சங்கீதா கட்கம், பிதாமகன், உயிர், தனம், மன்மதன் அம்பு, மசூதா ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

சங்கீதா அவரின் தாத்தா கே. ஆர். பாலன் பல படங்களை தயாரித்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இதன் பின்னணியை வைத்து தான் சங்கீதா சினிமா துறையில் நுழைந்தார். பரதநாட்டிய நடன கலைஞராக முறைப்படி நடனத்தை கற்றுக் கொண்டார் சங்கீதா.

sangeetha krish
Social Media Bar

இந்நிலையில் ரசிகா என்ற பெயரில் 1990 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படத்தில் நடித்து புகழடைந்தார். மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழடைந்த சங்கீதா, விஜய் டிவியில் வெளியான ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இந்நிலையில் ஜோடி சீசன் 1, ஜோடி சீசன் 3, ஜோடி சீசன் 4 என நான்கு சீசன்களில் அவர் நடுவராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த தற்போது இவர் ஜி தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று பிரபலம் அடைந்து வருகிறார்.

இவர் தமிழில் பிதாமகன் படத்தில் நடித்ததற்காக ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

பாண்டியராஜனை பற்றி கூறிய சங்கீதா

ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சங்கீதா. பாண்டியராஜன் அவரை திட்டிய சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார். இவர் மற்றும் பாண்டியராஜ் ஆகியோர் இணைந்து நடித்த கபடி கபடி என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

pandiyarajan sangeetha

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது. இயக்குனர் பாண்டியராஜன் இவரை கழுதை கழுதை என்று அனைவருக்கும் முன்னாடியும் திட்டுவாராம். என்னை ஒருவர் தைரியமாக திட்டியது என்றால் அது பாண்டியராஜன் சார் தான்.

மேலும் நான் என் அம்மாவிடம் சென்று என்னம்மா இவர் எல்லாரும் முன்பும், என்னை கழுதை என்று கூறுகிறார் கோபப்பட்டு பேசுவேன். என் வாழ்க்கையில் நான் முன்னேறுவதற்கு என்னை சுற்றி இருந்த ஏஞ்சல்களில் ஒருவராக பாண்டியராஜன் சாரும் இருந்திருக்கிறார் என அவர் பேடியில் கூறியிருக்கிறார்.