Latest News
14 வருடங்களுக்கு பிறகு ஒண்ணு சேருறோம்!- தளபதி 67 மாஸ் வீடியோ வெளியிட்ட த்ரிஷா!
நேற்று முதல் இணையத்தில் காட்டு தீயாக பரவி வரும் செய்தி தளபதி 67 அப்டேட். நேற்று முதல் தளபதி 67 இல் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/02/vlcsnap-2023-02-01-15h14m17s569-1024x578.png)
இந்த நிலையில் படத்தின் கதாநாயகியாக த்ரிஷா தேர்வாகியுள்ளார். விஜய்யுடன் அதிக படங்கள் நடித்த கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். கில்லி படத்தின் ஹிட்டை தொடர்ந்து வரிசையாக திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் த்ரிஷா.
இதில் ஆதி படம் மட்டும் நன்றாக ஓடவில்லை. அதன் பிறகு இவர்கள் இருவரும் காம்போவாக எந்த படமும் நடிக்கவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு இந்த காம்போ மீது அதிக ஆர்வம் இருந்தது. ஏற்கனவே மாஸ்டர் படம் வந்தபோதே அதில் த்ரிஷா நடித்திருக்கலாம் என்கிற பேச்சு இருந்தது.
தற்சமயம் த்ரிஷா சமூக வலைத்தளங்களில் இதுக்குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் த்ரிஷா ஏற்கனவே விஜய்யோடு நடித்த திரைப்படங்களை வைத்து ஒரு காம்போ வீடியோவாக இதை வெளியிட்டுள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைவதை தெரிவிக்கும் பொருட்டு இந்த வீடியோ அமைந்துள்ளது.
அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)