News
ஒ.டி.டிக்கு விற்பதில் புது வேலையை பார்த்த ஏ.ஜி.எஸ்.. செம காசுக்கு போகவிருக்கும் விஜய் கோட் திரைப்படம்!..
Vijay GOAT Movie : கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓ.டி.டி ரைட்ஸ் என்பது சினிமாவில் முக்கியமான பங்கு வகிக்கும் விஷயமாக ஆகிவிட்டது. திடீரென நடிகர்களின் சம்பளம் அதிகரிக்க ஓ.டி.டி ரைட்ஸ் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஓ.டி.டி ரைட்ஸ் மூலம் வரும் தொகையையும் சம்பளத்தோடு சேர்த்து வாங்கி கொள்கின்றனர் நடிகர்கள். அந்த வகையில் லியோ திரைப்படம் வெளியானப்போது 150 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். அந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 120 கோடி கொடுத்து வாங்கியது.
இந்த நிலையில் விஜய்யின் மார்க்கெட் அதிகரித்த நிலையில் அடுத்து நடிக்கும் கோட் திரைப்படத்திற்கு 200 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய தொகையாகும்.

இருந்தாலும் இந்த படம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கையில் அந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஓ.டி.டி மூலமாகவே விஜய்க்கு கொடுத்த சம்பளத்தை சம்பாதிக்க ப்ளான் செய்துள்ளது ஏ.ஜி.எஸ் நிறுவனம்.
இதற்காக ஓ.டி.டி உரிமத்தை இரு வகையாக பிரித்துள்ளது ஏ.ஜி.எஸ். தென்னிந்திய மொழிகளுக்கு தனி உரிமம், மற்ற மொழிகளுக்கு தனி உரிமம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் ஓ.டி.டியில் போடுவதற்கு 125 கோடியும், மற்ற மொழிகளுக்கு 75 கோடியும் உரிமம் தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதே போல மற்ற தயாரிப்பு நிறுவனங்களும் முடிவெடுத்தால் அது தயாரிப்பாளர்கள் வருவாயை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
