விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடித்தாரா அஜித்!.. இப்படியும் நடந்துச்சா!..

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.

அஜித்துக்கும் விஜய்க்கும் இடையே எப்படியான சண்டை இருந்தது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. விஜய்யை விமர்சித்து பாடலே வெளியிட்டவர் தல அஜித். அட்டகாசம் படத்தில் இதற்காகவே இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்ற பாடலை எழுதியிருப்பார்.

Social Media Bar

இந்த நிலையில் ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வெளியான ஒரே திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தை இயக்குனர் ஜானகி சௌந்தர் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் விஜய்க்கு நண்பனாக அஜித் நடித்திருப்பார். அப்போது ஜானகி சௌந்தர் மற்றும் விஜய் இருவருடனும் நட்பில் இருந்து வந்ததால் அந்த படத்திற்கு இலவசமாகவே நடித்து கொடுத்திருக்கிறார் அஜித். இந்த விஷயத்தை இயக்குனர் ஜானகி சௌந்தர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.