Latest News
நீ பேசவே வேணாம் கிளம்பு!.. கிளம்பு!.. அனுபாமாவை அனுப்பி வைத்த ரசிகர்கள்!.. அசிங்கமா போச்சு குமாரு!.
மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். முதல் படமே தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் அடுத்து அவருக்கு மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வர துவங்கின.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகளை பெற்ற அனுபாமா தொடர்ந்து கொடி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சினிமாவில் நடிகைகள் தங்கள் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வது கொஞ்சம் கடினமான காரியமாகும்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2024/04/tillu-square1.jpg)
அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக அனுபாமாவின் மார்க்கெட் குறைய துவங்கியது. அதனை தொடர்ந்து அதுவரை பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காமல் இருந்து வந்த அனுபாமா ஒட்டு மொத்தமாக கவர்ச்சியில் இறங்கினார்.
அப்படி அவர் கவர்ச்சியாக நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம்தான் தில்லு ஸ்கொயர். பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அனுபாமா முதல் முறை அதிக கவர்ச்சியால் நடிப்பதால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
100 கோடி வரை இந்த படம் வசூல் செய்ததால் இதற்கு வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அனுபாமா பேசுவதற்காக வந்தார். அப்போது அங்கிருந்த ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் அவரை பேச விடாமல் கத்தி உள்ளனர். ஒரு இரண்டு நிமிடம் அனுமதி கொடுங்கள் என அனுபாமா கேட்டும் அவர்கள் கத்திக்கொண்டே இருந்துள்ளனர்.
இந்த வீடியோ தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)