எடுத்த உடனேயே ஆக்‌ஷனில் இறங்கிய இயக்குனர்!.. விடாமுயற்சிக்கு முன்பே இந்த படம் வந்துருமோ!..

அஜித் நடிப்பில் வெகு நாட்களாகவே படமாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஒரு வருடம் வரை ஆன நிலையிலும் கூட இன்னமும் அந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடியவில்லை. லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு நடக்கும் என பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் அஜித் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கமிட் ஆகி விட்டார். அதன் படப்பிடிப்புகளும் துவங்கிவிட்டன. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

ஏற்கனவே மார்க் ஆண்டனி என்கிற வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த நிலையில் படத்திற்கான பூஜையை துவங்கி முதல் இரண்டு நாட்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

Social Media Bar

பொதுவாக படப்பிடிப்பு துவங்கும்போது பேச்சுக்கு ஏதாவது ஒரு காட்சியை படமாக்குவார்கள். ஆனால் இந்த இரண்டு நாள் படப்பிடிப்புக்கே படத்தின் சண்டை காட்சி ஒன்றை படமாக்கியுள்ளாராம் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த வேகத்தில் சென்றார் என்றால் எப்படியும் ஆறு மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுவார் என பேச்சுக்கள் இருக்கின்றன.

எனவே விடாமுயற்சிக்கு முன்பே குட் பேட் அக்லி வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.