Connect with us

ஆல் ஷோ ஹவுஸ்ஃபுல்.. ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்ல..! – இப்பவே ரூ.200 கோடி வசூலை தாண்டிய லியோ!

leo vijay

News

ஆல் ஷோ ஹவுஸ்ஃபுல்.. ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்ல..! – இப்பவே ரூ.200 கோடி வசூலை தாண்டிய லியோ!

Social Media Bar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் படம் லியோ. பல காலமாக தீவிர எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கும் இந்த படம் இன்னும் 3 நாட்களில் வெளியாகும் நிலையில் டிக்கெட் புக்கிங்குகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒரு மாதம் முன்னரே டிக்கெட் புக்கிங் தொடங்கி திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆனதால் கூடுதல் ஷோக்கள் திரையிட அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் லியோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முக்கியமாக தமிழ்நாடு தவிர்த்து கேரளா, ஆந்திராவில் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்துள்ளன

தமிழகத்தில் ஒரு சில திரையரங்குகள் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு பல ஷோக்களின் டிக்கெட் விற்று தீர்ந்து ஹவுஸ்புல் ஆகியுள்ளது. மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் பல இன்னும் டிக்கெட் முன்பதிவை ஓபன் செய்யவில்லை. ஆனாலும் இதுவரை தமிழ்நாடு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் புக்கிங் ஆகியுள்ள டிக்கெட்டுகளின் மூலம் இப்போதே வசூல் ரூ.200 கோடியை தொட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் இது முதல் நாள் வசூல் அல்ல, மொத்த டிக்கெட் விற்பனையின் தோராய மதிப்பு என்பதால், அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் படம் ஓடிய பிறகே வசூல் நிலவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது. விஜய்யின் லியோ படம் ரூ.1000 கோடி வசூலித்து தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படம் என சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது.

To Top