Connect with us

32 வருடமாக அஜித் கட்டிய கோட்டையை பத்தே நாட்களில் உடைத்த சிவகார்த்திகேயன்.. அமரன் படம் செய்த சம்பவம்.!

ajith sivakarthikeyan

Tamil Cinema News

32 வருடமாக அஜித் கட்டிய கோட்டையை பத்தே நாட்களில் உடைத்த சிவகார்த்திகேயன்.. அமரன் படம் செய்த சம்பவம்.!

Social Media Bar

Amaran is a movie that was released on Diwali and was well received by the masses. Sivakarthikeyan has acted well in the movie Amaran. The status of how much this film collected in 10 days has come out

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களிலும் மிக முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் அமரன்.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31 அன்று தீபாவளியை முன்னிட்டு அமரன் திரைப்படம் திரையில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே சூடுப்பிடித்து ஓடி கொண்டுள்ளது.

amaran

amaran

அமரன் வசூல்:

வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே 80 கோடி ரூபாய் வசூல் செய்தது அமரன் திரைப்படம். இந்த நிலையில் கடந்த பத்து நாட்களில் அமரன் திரைப்படத்தின் வசூல் இன்னமுமே அதிகரித்துள்ளது.10 நாட்களில் அமரன் திரைப்படம் 210 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அமரன் திரைப்பட்த்தின் வெற்றிக்கு நடிகை சாய் பல்லவி மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் சிவகார்த்திகேயனை அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியாது. ஆனால் அவர்களுக்கு சாய் பல்லவியை தெரியும். எனவே அவரது நடிப்பிற்காக தெலுங்கில் நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது அமரன் திரைப்படம்.

அமரன் திரைப்படம் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படத்தின் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படத்தின் மொத்த வசூலையும் 10 நாட்களில் தாண்டியுள்ளது அமரன் திரைப்படம். இந்த நிலையில் இது இப்போது பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

To Top