Cinema History
குழந்தைக்கு அப்பாவாக எல்லாம் நடிக்கணுமா!.. வாய்ப்பில்ல ராஜா!.. அமீர் படத்தை மறுத்த விஜய்!.
சினிமாவை பொறுத்தவரை மாறுப்பட்ட கதை அமைப்புகளும் கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். ஆனால் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கான முதிர்ச்சி என்பது அனைவருக்குமே வந்துவிடாது.
உதாரணமாக நடிகை மீனா என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் ஒரு திருமணமான கர்ப்பிணி பெண்ணுக்குடைய அறிவு முதிர்ச்சியுடன் நடித்திருப்பார்.
பெண்களால் இப்படி எளிதாக நடிக்க முடியும். ஆனால் ஆண்களுக்கு அது கஷ்டம். விஜய் திருப்பாச்சி மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தப்போதே அவருக்கு அமீர் இரண்டு கதைகளை கூறினார். அதில் ஒன்று ஆதிபகவான் திரைப்படத்தின் கதை. அந்த கதையில் விஜய் நடிக்காமல் பிறகு ஜெயம் ரவி அந்த கதையில் நடித்தார்.

இரண்டாவதாக சொன்ன கதை கண்ணபிரான் என்கிற கதையாகும். அந்த கதையை கேட்டவுடனே விஜய்க்கு பிடித்துவிட்டது. ஆனால் படத்தில் அவருக்கு நெருடலாக இருந்த விஷயம் ஒரு 5 வயது குழந்தைக்கு அவர் அப்பாவாக நடிக்க வேண்டும் என்பதுதான்.
ஏனெனில் அதுவரை அவர் குழந்தைக்கு தந்தையாக நடிக்கவில்லை. இந்த நிலையில் அந்த கதையில் அந்த ஒரு விஷயம் காரணமாக அவர் நடிக்கவில்லை. ஆனால் தற்சமயம் தெறி,லியோ என பல படங்களில் குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்கிறார்.
இப்போதுதான் விஜய்க்கு அந்த முதிர்ச்சி வந்துள்ளது. ஆனால் அப்போதே அந்த படத்தில் நடித்திருந்தால் நல்ல வெற்றி படமாக அமைந்திருக்கும் என்கிறார் அமீர்.
