எப்படி இருக்கு ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப்! – குவியும் வரவேற்புகள்!
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஒரு நகைச்சுவையான கதாபாத்திரமாக ஆண்ட்மேன் இருந்தாலும் அதன் ஒவ்வொரு பாகமும் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது.

உண்மையில் இன்ஃபினிட்டி வார் முடிந்து எண்ட் கேம் துவங்குவதற்கு ஆண்ட் மேன் தான் காரணமாக இருப்பார். எண்ட் கேமிற்கு பிறகு சுத்தமாக தானோஸின் தாக்கம் இல்லாத சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்க மார்வெல் நினைத்தது.
இதற்காக மார்வெல் பேஸ் 5 துவங்கப்பட்டது. அதாவது பழைய சூப்பர் ஹீரோக்களை விட்டு விட்டு புது சூப்பர் ஹீரோக்கள் புது கதைகள் என பேஸ் 5 இயங்கும். இந்த பேஸ் 5 இன் துவக்கமாகதான் ஆண்ட் மேன் அண்ட் த வாஸ்ப் குவாண்டமேனியா திரைப்படம் வெளியாகியுள்ளது.
முந்தைய பாகத்தில் வெகு குறைவான அளவிலேயே குவாண்டம் உலகம் காமிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தில் குவாண்டம் உலகம்தான் படத்தின் கதைகளமாக உள்ளது. எப்போதும் நகைச்சுவையாக செல்லும் ஆண்ட் மேன் கதை இந்த முறை கொஞ்சம் செண்டிமெண்டாக செல்கிறது.
படத்தின் கதையை பொறுத்தவரை கதாநாயகன் ஸ்காட் படம் துவங்கும்போதே தனது சூப்பர் ஹீரோ வேலையில் இருந்து ரிட்டயர் ஆகிறான். தனது மகள் கேஸியுடன் தனது நாட்களை செலவழிக்க நினைக்கிறான்.
ஆனால் குவாண்டம் உலகம் மூலம் நடக்கும் எதிர்பாராத திருப்பம் காரணமாக ஸ்காட்டின் குடும்பத்திற்கு பிரச்சனை வருகிறது. இதனால் மீண்டும் ஆண்ட் மேனாக மாறும் ஸ்காட் இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிக்க போகிறார் என்பதே படத்தின் கதையாக உள்ளது.