சின்ன பிரச்சனைக்காக பல வருட பழக்கத்தை தூக்கி எறிந்த இளையராஜா!.. கை கொடுத்த ஏ.ஆர் ரகுமான்!..
தமிழ் சினிமாவில் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் பலரும் ஒரு காலத்தில் நம்மை போல் சாதரண ஆட்களாக இருந்தவர்கள்தான். பிறகு பெரும் போராட்டங்களை கண்டு கஷ்டப்பட்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளனர்.
ஆனால் பெரும் நிலையை அடைந்த பின்னர் பிரபலங்கள் பலரும் தாங்கள் கடந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றனர். இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவிற்குள் வந்து மொத்த சினிமாவையும் புரட்டி போட்டார்கள் என்றே கூறலாம்.
மூவருமே கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு பல கனவுகளுடன் வந்தவர்கள். எனவே இவர்கள் மூவருமே எளிதாக நண்பர்களாகிவிட்டனர். இந்த நிலையில் மூவரும் தொடர்ந்து பல படங்களில் வேலை பார்த்து வந்தனர். இதில் கவிஞர் வைரமுத்து முழுக்க முழுக்க இளையராஜாவைதான் நம்பி இருந்தார்.
இந்த நிலையில் இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் இடையே சின்ன மன கசப்பு ஏற்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக பெரும் பிரச்சனையாக மாறவே வைரமுத்துவை கைவிட்டார் இளையராஜா. கடலோர கவிதைகள் திரைப்படத்திற்கு பிறகு பாடல் வரிகளை எழுதுவதற்கு ஆளை மாற்றினார் இளையராஜா.
இந்த நிலையில் படங்களில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் பெரிதாக கஷ்டப்பட்டுள்ளார் வைரமுத்து. அதன் பிறகு ஏ.ஆர் ரகுமான் சினிமாவிற்கு வந்தப்போது அவரது இசைக்கு தகுந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார். எனவே வைரமுத்துவை தன்னுடன் சேர்த்துக்கொண்டார் ஏ.ஆர் ரகுமான்.