Connect with us

ஏமாற்றப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்! பாடகி தீ மற்றும் அறிவின் நிலை என்ன? ஸ்கேமில் சிக்கிய பிரபலங்கள்!

ar.rahman- dhee- singer arivu

Latest News

ஏமாற்றப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்! பாடகி தீ மற்றும் அறிவின் நிலை என்ன? ஸ்கேமில் சிக்கிய பிரபலங்கள்!

Social Media Bar

ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம்  ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என  வீடியோ போட்டு பதற வைத்த சந்தோஷ் நாராயணன், தற்போது அத்த பாடல் மூலம் ஏ.ஆர். ரஹ்மானும் ஏமாற்றப்பட்டுள்ளார் என மற்றுமொரு இடியை போட்டுள்ளார். 

 கடந்த 2021ம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் 487 மில்லியன் வியூஸ் கடந்து ஹிட் அடித்தது. பாடகி தீ மற்றும் அறிவின் குரல் மற்றும்  சந்தோஷ் நாராயணன் இசையில், பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல் அலற விட்டது. இந்த நிலையில் இந்த பாடல் குறித்து இன்னும் பல்வேறு சர்ச்சைகள் உருவாக்கி கொண்டே செல்கிறது. இரண்டு நாட்களுக்கு  முன்பு இந்த பாடல் மெல்லாம் ஒரு ரூபாய் கூட கிடைக்கவிலை என சந்தோஷ் நாராயணன் தந்து x தளத்தில் போட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

மேலும், சந்தோஷ் நாராயணனுக்கும் தெருக்குரல் அறிவுக்கும் இடையே சண்டை வெடிக்க காரணம், அவரை அசிங்கப்படுத்தியது மட்டுமல்ல எனவும் அந்த பாடலுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக கொடுக்கவில்லை என்பதும் தன எனவும் தற்போது தெரிய வந்திருக்கிறது.

மஜா எனும் யூடியூப் சேனல் மூலம் தான் இந்த என்ஜாய் எஞ்சாமியை வெளியிட்டனர். அந்த மஜா சேனல் ஏ.ஆர். ரஹ்மான் உடையது என்பதால், அவர் தான் ஏமாற்றி விட்டார் என பிரச்சனைகள் வெடித்த நிலையில், அதற்கும் சந்தோஷ் நாராயணன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மானின் கம்பெனி தான் மஜா என சொல்லப்பட்ட நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் எப்போதும் எனக்கு பெரிய தூணாக இருப்பவர். இந்த விஷயத்தில் அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார் என சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். பாடகி தீ மற்றும் அறிவுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும் விரைவில் எல்லாம் சரியாகும் என சந்தோஷ் நாராயணன் புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இசைத்துறையில் முன்னணியில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களே இப்படியொரு பெரிய ஸ்கேமில் எப்படி சிக்கிஇருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top