10  வருஷத்துக்கு ஒரு தடவை வர்ற அதிசயம் அது.. அதை மிஸ் பண்ணிட்டேன்.. அரவிந்த் சாமி புகழ்ந்த அந்த படம்..?

தமிழில் மிகக் குறைவான படங்களில் நடித்தும் கூட இவ்வளவு பிரபலமடைய முடியும் என்பதை வெளிப்படையாக காட்டியவர் நடிகர் அரவிந்த்சாமி.

அரவிந்த்சாமி இளம் வயதிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்து கொண்டிருக்கிறார் அதே சமயம் ஒரு கார்ப்பரேட் முதலாளியாகவும் அவர் இருந்து வருகிறார்.

ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் அதே சமயத்தில் அவ்வப்போது வந்து நடித்தும் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நிறுவனத்தை நடத்துவது தான் அவரது முதல் வேலையாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தை நடத்த துவங்கியதில் இருந்து மிக குறைவாக தான் படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.

அரவிந்த்சாமி கொள்கை:

இதனால் சில நல்ல கதைகளை கூட அவர் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து அவர்பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பிசினஸ் தொடர்பான வேலைகள் அதிகமாக இருக்கும் சமயங்களில் நான் நடிக்க மாட்டேன்.

aravind samy
aravind samy
Social Media Bar

நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி விடுவேன். ஆனால் சில நேரங்களில் சில கதைகள் என்னை மிகவும் ஆழமாக ஈர்த்து விடும். அப்பொழுது அந்த கதைக்காக நான் எனது விதிமுறைகளை விட்டு நடிப்பதற்கு ஒப்புக்கொள்வேன்.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை தான் அந்த மாதிரி கதைகள் எனக்கு வரும் அப்படியாக என்னிடம் வந்து நான் கைவிட்ட கதைதான் மாநாடு திரைப்படம் என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி. அதில் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி தான் நடிப்பதாக இருந்துள்ளது.

ஆனால் ஒரு மாதகாலம் தாமதமாகும் என்கிற காரணத்தினால் மாநாடு பட குழு எஸ்.ஜே சூர்யாவை வைத்து படத்தை எடுத்திருக்கின்றனர். இந்த விஷயத்தை பகிர்ந்த அரவிந்த்சாமி அதனாலேயே இன்னும் நான் மாநாடு திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார்.