Connect with us

மாயாவோட ட்ரிக் தெரியாம சிக்கிட்டீங்களே விச்சித்திரா!.. சரியாக கணக்கு போடும் அர்ச்சனா?

maya archana

Bigg Boss Tamil

மாயாவோட ட்ரிக் தெரியாம சிக்கிட்டீங்களே விச்சித்திரா!.. சரியாக கணக்கு போடும் அர்ச்சனா?

Social Media Bar

Maya and Archana : பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பான போட்டியாளர்கள் என வரிசைப்படுத்தினால் அதில் அர்ச்சனா,மாயா, பூர்ணிமா, விசித்திரா ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக இருப்பார்கள். வாரா வாரம் இவர்கள் நால்வரும் மக்கள் மனதில் தங்களை நிலை நாட்டி கொள்ளும் அளவிற்கு ஏதாவது ஒரு விஷயத்தை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அர்ச்சனா வைல்ட் கார்டு மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தப்போது அவர் சுற்றி இருக்கும் சக போட்டியாளர்களால் மனதளவில் தாக்கப்பட்டார். அப்போது விச்சித்திராதான் அவருக்கு சாதகமாக இருந்தார். இதனையடுத்து விச்சித்திரா எப்போதுமே தனக்கு சாதமாக இருப்பார் என நினைத்தார் அர்ச்சனா.

ஆனால் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸில் கதைகளம் மாறும். போக போக விச்சித்திராவும் மாயாவும் நல்ல பழக்கத்திற்கு வந்துவிட்டனர். இது அர்ச்சனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து அர்ச்சனா கூறும்போது ”தற்சமயம் மாயா சொல்லிதான் நான் அனைத்தையும் செய்கிறேன் என விச்சித்திரா மேம் சொல்கிறார்கள்.

ஆனால் மாயா பேச்சை கேட்டு விளையாடியவர்கள் எல்லாம் இப்போ என்ன நிலைல இருக்காங்கன்னு தெரியும். மாயா அவங்களை பாதுகாத்துக்கொள்ள மற்ற போட்டியாளர்களை பயன்படுத்தி கொள்கின்றார். அது தெரியாமல் இவர்களும் அவர் சொல்வதை கேட்கின்றனர் என கூறியுள்ளார் விச்சித்திரா.

இந்த நிலையில் ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் கண்ணீர் சிந்திய அர்ச்சனா தற்சமயம் விச்சித்திராவை விட சிறப்பாக விளையாட்டை புரிந்துகொண்டு விளையாடுகிறார் என கூறி வருகின்றனர் சமூக வலைத்தள ஆர்வலர்கள்!.

To Top