Connect with us

என்னோட ஏ படத்தை என் பையன் பார்த்துட்டான்.. நடிகைக்கு வந்த தர்மசங்கடம்!..

News

என்னோட ஏ படத்தை என் பையன் பார்த்துட்டான்.. நடிகைக்கு வந்த தர்மசங்கடம்!..

Social Media Bar

திரைப்படங்களில் நடிப்பது சில சமயம் நடிகைகளுக்கு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் காலி செய்து விடுகிறது. முக்கியமாக கவர்ச்சி திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அந்த படத்தின் நிஜக் கதையை நடிகைகளிடம் கூறாமல் பொய்யான கதையை கூறி விடுகின்றனர்.

நடிகைகள் கதையை கண்டுபிடிக்காத வண்ணம் படபிடிப்பை நடத்தி விடுகின்றனர். அதற்குப் பிறகு படம் வெளியாகும்போதுதான் அது மோசமான திரைப்படம் என்பதே நடிகைகளுக்கு தெருகிறது.

நடிகை சிம்ரன் கூட இந்த மாதிரியான ஒரு பிரச்சனையில் சிக்கியிருந்தார். அவர் நடித்து ஒரு திரைப்படம் அப்படிதான் ப்ளூ ஃபிலிம் படமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று தெரியாமல் அந்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

நடிகைகளை ஏமாற்றும் இயக்குனர்கள்:

பாதியிலேயே பிறகு சுதாரித்துக்கொண்டு அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் சிம்ரன். ஆனாலும் இயக்குனர் சிம்ரன் நடித்த காட்சிகளை மட்டும் வைத்து கோர்த்து அந்த திரைப்படத்தை வெளியிட்டு விட்டார.

 அதேபோலத்தான் நடிகை அமலா பாலும் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த திரைப்படத்தின் கதை என்னவென்று சரியாக தெரியாமல் அந்த திரைப்படத்தில் நடித்து விட்டார்.

அதே மாதிரியான அனுபவத்தை சின்னத்திரையில் பிரபலமாக இருந்த ஒரு நடிகையும் அனுபவித்து இருக்கிறார். சீரியல்களில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை அர்ச்சனா.

ஏமாந்த நடிகைகள்:

இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் இந்த நிலையில் இவர் திரை துறையில் வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்று இருந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த படம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் கூறும் பொழுது அந்த படத்தின் கதையை என்னிடம் கூறும் பொழுது கதை வேறு மாதிரி இருந்தது. அதற்குப் பிறகு படத்தை எடுக்கும்பொழுது படத்தின் கதை வேறு மாதிரி இருந்தது.

பிறகு படத்தின் போஸ்டர்கள் வெளியான பொழுது அது முழுக்க முழுக்க கவர்ச்சி படமாக இருந்தது தெரிந்தது. அப்பொழுது அதில் என்னுடைய புகைப்படத்தை பார்க்கவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் அந்த போஸ்டரை பார்த்த என்னுடைய மகன் அம்மா இந்த போட்டோவில் இருப்பது நீதானா என்று என்னிடம் கேட்டான்.

அந்த சமயத்தில் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் இது குறித்து நான் புகார் கொடுத்தேன் ஆனால் அவர்கள் இதை பெரிதுபடுத்தினால் நீ விளம்பரம் தேடுவதற்காக செய்கிறாய் என்று கூறி விடுவார்கள் எனவே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டனர். அந்த படத்தில் நடித்தது தான் என் வாழ்வில் செய்த பெரிய தவறு என்கிறார் அர்ச்சனா.

Articles

parle g
madampatty rangaraj
To Top