சாயிஷா ஆர்யாவின் மகளை பார்த்துள்ளீர்களா? வெளிவந்த புது புகைப்படம்!

தமிழ் திரையுலகில் நடிகர் நடிகையராக இருந்து காதல் செய்து திருமணம் செய்துக்கொண்ட ஜோடிகளில்  சாயிஷா ஆர்யாவும் முக்கியமானவர்கள்.

Social Media Bar

தமிழில் வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படத்திலேயே அவருக்கு மிகப்பெரும் ரசிக பட்டாளம் ஒன்று உருவாகிவிட்டது.

இதனை அடுத்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார் சாயிஷா. அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்தார். 2018 இல் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தார். இதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் காதலானது.

சில நாட்களில் இருவரும் திருமணாம் செய்துக்கொண்டனர். அதன் பிறகு காப்பான் மற்றும் டெடி என்ற இரு திரைப்படங்களில் நடித்தார் சாயிஷா. பிறகு கர்ப்பமாக இருந்ததால் 2021 க்கு பிறகு அவர் நடிக்கவில்லை.

சாயிஷாவிற்கு குழந்தை பிறந்த புதிதில் அந்த போட்டோக்களை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு தற்சமயம் தனது குழந்தையின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சாயிஷா. இந்த புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.