Tamil Cinema News
நான் தாண்டா செய்வேன்.. என்ன பண்ணுவ.. வடக்கன்ஸ்க்கு அட்லீ கொடுத்த பதிலடி..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர்களின் மிக முக்கியமானவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தார் அட்லீ.
அதனை தொடர்ந்து தமிழில் திரைப்படங்களை இயக்க துவங்கினார் அவரது முதல் திரைப்படமான ராஜா ராணி திரைப்படம் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது.
அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய நடிகர்கள் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் அடுத்து நடிகர் விஜய்யை வைத்து திரைப்படத்தை இயக்கத் துவங்கினார் அட்லீ.
நடிகர் அஜித் தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்ததை போல நடிகர் விஜய் இயக்குனர் அட்லிக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார் இப்படியாக தமிழில் திரைப்படம் இயங்கி வந்த அட்லிக்கு ஹிந்தியில் திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
ஹிந்தியில் அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் பெரிய வெற்றியை அடைந்தது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்த ஒரு விஷயத்தை அட்லி பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் கூறும்பொழுது ஒருமுறை நடிகர் சாருக் கான் என்னை ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார் அப்போதுதான் நாங்கள் அவரது திரைப்படம் பற்றி பேசி வந்து கொண்டிருந்தோம்.
அப்போது மைதானத்தில் நான் ஷாருக்கான் உடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் என்னை கேலி செய்தனர். அப்போது நீ எல்லாம் ஒரு ஆளா உன்னால சாருக்கு பக்கத்தில் உட்கார முடியுமா என்று என்னை கேலி செய்தனர். அவர்களுக்கு கூறிக் கொள்வதெல்லாம் நான் தாண்டா ஆளு என்னால தான் அதை செய்ய முடியும் என்று பதிலடி கொடுத்து பேசியிருந்தார் அட்லி.
