Connect with us

இணையத்தில் போட்ட ஒரே ஒரு பதிவு!.. கவுன்சிலரை பயமுறுத்திய த்ரிஷா!..

trisha av raju 1

Latest News

இணையத்தில் போட்ட ஒரே ஒரு பதிவு!.. கவுன்சிலரை பயமுறுத்திய த்ரிஷா!..

cinepettai.com cinepettai.com

Actress trisha: தமிழ் நடிகைகளிலேயே அதிகமாக சர்ச்சைக்கு உள்ளாகும் நடிகையாக நடிகை த்ரிஷா இருந்து வருகிறார். ஏற்கனவே நடிகர் மன்சூர் அலிக்கான் இப்போதெல்லாம் வில்லன்களுக்கு நடிகைகளுடன் நெருக்கமாக காட்சி இல்லை என விளையாட்டாக கூறியதற்கே பெரும் எதிர்வினையை சந்தித்தார் மன்சூர் அலிக்கான்.

இந்த நிலையில் அதிமுக அரசியல்வாதியான ஏ.வி ராஜு அதை விடவும் மோசமான அவதூறு ஒன்றை பரப்பியிருந்தார் நேற்று சமூக வலைத்தளங்களில் அது பிரபலமாகி வந்தது. அதாவது அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் த்ரிஷா மீது ஆசைப்பட்டு அவரை கேட்டதாகவும் அதற்காக 25 லட்சம் கொடுத்து நடிகர் கருணாஸ் த்ரிஷாவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இது பெரும் சர்ச்சையானது. இதனால் கடுப்பான த்ரிஷா அடுத்தப்படியாக இதனை கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டார். அதில் அவர் கூறும்போது “பிரபலமாவதற்காக இழிவான செயல்களை பார்க்கும்போது சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர் மீது கண்டிப்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏ.வி ராஜு வெளியிட்ட வீடியோவில் அவர் எதையும் தெளிவாக பேசியதாக தெரியவில்லை. ஆனால் அவர் இதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார் என மட்டும் தெரிகிறது. த்ரிஷாவின் ஒரு பதிவு அரசியல்வாதிகளுக்கே பயம் காட்டிவிட்டதே என இதுக்குறித்து த்ரிஷாவை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

POPULAR POSTS

varalaxmi sarathkumar
kavin harish kalyaan
shakila bailwan ranganathan
vishal
ar rahman ilayaraja
gabriella
To Top