முதல் பார்ட்டை மிஞ்சுடுச்சி! – அவதார் 2 எப்படி இருக்கு?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகையே வியக்க வைத்த மிக முக்கியமான திரைப்படம் அவதார். 2009 ஆம் ஆண்டு வந்த இந்த படம் உலக அளவில் அதிக வசூல் படைத்த படமாக உள்ளது.

இப்போது வரை அதன் வசூல் சாதனையை எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்நிலையில் அவதார் முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் உள்ளதாம் அவதாரின் இரண்டாம் பாகம்.

கடந்த ஒரு வாரம் முன்பாகவே சென்னை போன்ற நகரங்களில் அவதார் படத்திற்கான புக்கிங் திறக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் ஆனது. படம் முழுக்க முழுக்க தண்ணீரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

எனவேதான் படத்திற்கு அவதார் த வே ஆஃப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் பாண்டோரா கிரகத்தில் வாழும் பல அதிசய விலங்குகளையும், பூச்சிகளையும் பார்த்திருப்போம். ஆனால் இந்த பாகத்தில் கடலில் வாழும் பல விசித்திரமான உயிரினங்களை பார்க்க முடிகிறது என கூறப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகி இல்லை. கதாநாயகனின் மகன் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார். இனி வரும் பாகங்களில் அவர் கதாநாயகனாக இருப்பார் என கூறப்படுகிறது.

இந்த பாகம் அவதார் முதல் பாகத்தை விட அதிகமாக வசூல் செய்தால்தான் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க முடியும் என ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.

Refresh