என்னதுய்யா வயசு பிள்ளைய தடுவுற மாதிரி தடவுற.. பாக்கியராஜ் செயலால் கடுப்பான வாலி!..

Bhagyaraj and Vaali: தமிழில் குடும்ப கதைகளிலேயே வயது வந்தவர்களுக்கான ஜோக்குகளை வைத்து அதை அவர்கள் முகம் சுளிக்காமல் பார்க்க வைப்பவர் இயக்குனர் பாக்கியராஜ்.

இதனாலேயே பாக்கியராஜின் திரைப்படங்களில் அந்த மாதிரி காட்சிகளை அதிகமாக எதிர்பார்த்தனர் இளைஞர்கள். அப்போது பாக்கியராஜ் மிகவும் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் பாக்கியராஜிடம் வாய்ப்பு வாங்குவது என்பதே மற்ற இயக்குனர்களுக்கு கடினமான காரியமாக இருந்தது.

ஏனெனில் பாக்கியராஜ் அதிகப்பட்சம் அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த நிலையில் திரைப்படங்களுக்கு பாடல்களும் நாமே இசையமைத்தால் என்ன என யோசித்தார் பாக்கியராஜ்.

அது முதல் இவர் சங்கீதமும் கற்றுக்கொள்ள துவங்கினார். இந்த நிலையில் பாக்கியராஜ் இசையமைக்கும் பாடல்களுக்கு பாடல் வரிகளை வாலிதான் எழுதி வந்தார். வாலியிடம் வரிகளை எளிதாக வாங்கிவிட முடியாது. அவருக்கு அப்போது எழுத மனநிலை இருந்தால் உடனே எழுதிவிடுவார்.

இல்லையென்றால் தாமதமாகும். எனவே அவரை யாரும் வற்புறுத்த கூடாது. இந்த நிலையில் ஒருமுறை வாலியை பாக்கியராஜ் சந்திக்க போகும்போது வாலி அவசரம் புரியாமல் மிகவும் பொறுமையாக வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார்.

பிறகு பாக்கியராஜிடம் வெற்றிலை போட்டுக்கொள்ள சொன்னார். உடனே அவரை வெறுப்பேற்றும் விதமாக இன்னும் பொறுமையாக வெற்றிலையை எடுத்து மெதுவாக துடைத்து, மெதுவாக சுண்ணாம்பு தடவி போட்டார் பாக்கியராஜ். அதை பார்த்து பொறுமையிழந்த வாலி நானும் எவ்வளவோ பார்த்திருக்கேன்.

ஆனால் யாரும் உன்ன மாதிரி வெற்றிலை போட்டதில்லை. என்னுமோ வயசு பொண்ண தடவுற மாதிரி இந்த தடவு தடவுறியேயா என கேட்டுள்ளார் வாலி. இந்த விஷயத்தை பாக்கியராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version