படப்பிடிப்புக்கு வந்துட்டு அதை செய்யலாமா?.. ரஜினிக்கும், கமலுக்கும் பாலச்சந்தர் கொடுத்த தண்டனை..

என்னதான் போட்டி நடிகர்கள் என்றாலும் கூட ரஜினியும் கமல்ஹாசனும் சினிமாவிற்கு வந்த காலம் முதலே நண்பர்களாக இருந்தனர். நிறைய பேட்டிகளில் ரஜினி கமலை புகழ்ந்து பேசுவதை பார்க்க முடியும். அதேபோல கமல் சில பேட்டிகளில் ரஜினியை புகழ்ந்து பேசுவதையும் பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது நடந்த சில சுவையான அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் கமல்.

நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் கமல்ஹாசன் ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து நடித்தனர். அந்த திரைப்படத்தை இயக்குனர் பாலச்சந்தர் இயக்கினார். அப்பொழுது மலேசியாவில் படப்பிடிப்பிற்காக அனைவரையும் அழைத்துச் சென்றிருந்தார் பாலச்சந்தர்.

காலையில் 6:00 மணிக்கு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று பாலச்சந்தர் கூறியிருந்தார். அவரிடம் பேசி எட்டு மணிக்கு வருவதாக கமலும் ரஜினியும் கூறிவிட்டு இரவு 3 மணி வரை மலேசியாவை சுற்றி பார்த்துள்ளனர். சுற்றி பார்த்துவிட்டு காலையில் வந்து காரில் ஏறியவுடன் பாலச்சந்தர் அன்று எடுக்கப் போகும் காட்சிகள் குறித்து பேசிக்கொண்டு வந்துள்ளார்.

ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கமலும் ரஜினியும் அதை காதில் வாங்காமல் நன்றாக தூங்கி உள்ளனர் இதை பார்த்த பாலச்சந்தர் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களா என்று திட்டிவிட்டு அன்று முழுக்க தூங்க கூடாது என்று அவர்களுக்கு தண்டனை அளித்து விட்டார். தூங்குவதற்கு மறைவாக எங்கேயாவது இடம் கிடைக்காதா என்று நானும் ரஜினியும் அன்று முழுவதும் இடம் தேடிக் கொண்டிருந்தோம் என்று அந்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார் கமல்ஹாசன்.