குடித்துவிட்டு சூட்டிங் வந்த ரஜினிகாந்த்! – மிரட்டி அனுப்பிய அந்த இயக்குனர்! யார் தெரியுமா?

 தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இதுவரை 150 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த்,  தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.  ஆனால் அவையே அவர் திரையுலகில் பெரும் நடிகராக வருவதற்கு உதவி புரிந்தன.

Social Media Bar

 கமல், ரஜினி இதுவருமே திரையில் பெரும் நடிகர்களாக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள்தான். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படம் மூலமாக முதன் முதலாக பாலச்சந்தர் ரஜினிகாந்தை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

 அப்போது ரஜினிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.  எனவே படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினி தனியாக சென்று மது அருந்திவிட்டு  ஓரமாக அமர்ந்து விட்டார். இதன் பிறகு வந்த  உதவி இயக்குனர் ரஜினியிடம் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை உங்களுக்கான காட்சிகள் இருக்கிறது எனவே தயாராகி வரவும் எனக் கூறிவிட்டார்.

 ஆனால் ஏற்கனவே ரஜினி மது அருந்தி இருந்ததனால் வேக வேகமாக சென்று குளித்துவிட்டு, ஆடைகளை மாற்றிக் கொண்டு, வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு இயக்குனர் கே பாலச்சந்தரிடம் வந்தார்.  ஆனால் பாலச்சந்தர் ரஜினியை பார்த்த உடனேயே அவர் மது அருந்திவிட்டு வந்திருப்பதை கண்டறிந்து விட்டார். உடனே அவரிடம் தனியாக பேசுவதற்காக அழைத்தார்.

 பாலச்சந்தர் ரஜினியிடம் “ உனக்கு நாகேஷ் தெரியுமா? உன்னை விட பெரிய நடிகன். அவர் முன்னால் நீ ஒரு எறும்புக்கு சமம்.  அவரே மது அருந்தியதால்தான் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டார்.  எனவே இனி ஒரு முறை நீ மது அருந்துவதை நான் பார்த்தால் தொலைத்து விடுவேன்“  என்று எச்சரித்துள்ளார் பாலச்சந்தர்.

 அதிலிருந்து இப்போது வரை எந்த ஒரு படப்பிடிப்பிற்கு சென்றாலும் எவ்வளவு குளிரான பகுதிகளுக்கு சென்றாலும் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்த் மது அருந்துவதே கிடையாது. இதை அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.