Connect with us

நடு ராத்தி கேட்டாலும் சீன் சொல்லனும்!.. பாக்கியராஜிடம் லிவிங்ஸ்டன் அனுபவித்த கொடுமைகள்!..

bhagyaraj livingston

Cinema History

நடு ராத்தி கேட்டாலும் சீன் சொல்லனும்!.. பாக்கியராஜிடம் லிவிங்ஸ்டன் அனுபவித்த கொடுமைகள்!..

Social Media Bar

குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். இயக்குனராகவும் நடிகராகவும் அவர் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆவார். அவர் எடுக்கும் திரைப்படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் இருந்தாலுமே கூட அந்த திரைப்படங்கள் அனைத்துமே குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவையாகவே இருந்தன.

பாக்கியராஜை திரையில் பார்க்கும் பலரும் அவர் ஒரு ஜாலியான கதாபாத்திரம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த ஒரு இயக்குனரும் உதவி இயக்குனரிடம் ஸ்ட்ரிக்டாகவே இருப்பார்கள் என்பது லிவிங்ஸ்டன் கொடுத்த ஒரு பேட்டியின் மூலம் தெரிகிறது.

சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த போது லிவிங்ஸ்டன் ஆரம்பகாலகட்டத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். முந்தானை முடிச்சு உட்பட பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அப்பொழுது ஒரு படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருமுறை இரவு இரண்டு மணிக்கு வந்து லிவிங்ஸ்டென் ஆறையின் கதவை தட்டியுள்ளார் பாக்யராஜ்.

என்ன என்று கேட்பதற்காக கதவை திறந்த லிவிங்ஸ்டண்ணிடம் படத்தில் 29 ஆவது காட்சியில் என்ன வரும் என்று கேட்டுள்ளார். லிவிங்ஸ்டனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நடுராத்திரி உறக்கத்தில் இருந்தவரை எழுப்பிவிட்டு எதற்கு இப்படி ஒரு கேள்வியை கேட்கிறார் என்று யோசித்துள்ளார் லிவிங்ஸ்டன்.

இல்லை சார் எனக்கு அந்த காட்சி நினைவில் இல்லை என்றும் கூறியுள்ளார். அதனை கேட்ட பாக்யராஜ் திரும்ப அறைக்கு சென்றுள்ளார் பிறகு காலையில் வந்த பாக்கியராஜ் லிவிங்ஸ்டனை திட்டி உள்ளார். தூக்கத்தில் எழுப்பிவிட்டு கேட்டாலும் என் படத்தின் காட்சிகள் உனக்கு ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் லிவிங்ஸ்டன்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top