மிஸ்டர் எக்ஸின் விஜயம்!.. பாக்கியராஜ் எழுதுன முதல் கதை இதுதான்!.. சின்ன வயசுலயே வேற லெவல் போல!..

Director Bhagyaraj: தமிழ் திரை இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு தனித்துவமான வரவேற்பு இருந்தது. மேலும் அவரை நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

பாக்கியராஜ் இயக்கிய பல திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். இப்போது லோகேஷ் கனகராஜுக்கு இருக்கும் அதே வரவேற்பு அப்போது பாக்யராஜுக்கு இருந்தது. ஒவ்வொரு வாரமும் பாக்யராஜின் அலுவலகத்திற்கு முன்பு பல கிலோமீட்டருக்கு மக்கள் நிற்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தவர் பாக்கியராஜ் சிறுவயதிலேயே பாக்யராஜிற்கு சினிமாவில் நாடகங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் பொதுவாக நாடகங்கள் என்பவை காதலை சுற்றியே எடுக்கப்பட்டிருந்தன.

Social Media Bar

ஒன்று காதலன் காதலி இருவரும் சுலபமாக சேருவது போன்று கதை இருக்கும். அல்லது மிக மோசமாக அவர்கள் பிரிவது போன்ற கதை இருக்கும் இதை தாண்டி நாடகங்களில் கதையே இல்லை அதனால் சலிப்படைந்த பாக்யராஜ் எப்போதும் அவர்கள் நண்பர்களிடம் நாடகங்கள் குறித்து குறை சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

இந்த நிலையில் அவரது நண்பர்கள் அவரிடம் ஒரு சவால் விட்டனர். அதாவது காதல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை பாக்யராஜ் எழுத வேண்டும். அப்போது சிறுவயதிலேயே பாக்யராஜ் எழுதிய கதைதான் மிஸ்டர் எக்ஸின் விஜயம்.

இந்த கதைப்படி ஒரு பண்ணையார் தனது மகனை வளர்த்து வருகிறார். அப்பொழுது அந்த பண்ணையாருக்கு திடீரென ஒரு மர்ம தந்தி வருகிறது அந்த தந்திக்கு பிறகு ஒரு மர்ம நபருக்கு தொடர்ந்து பணம் கொடுத்து வருகிறார் பண்ணையார்.

இந்த நிலையில் யார் அந்த நபர் என்று கண்டுபிடிக்க பண்ணையாரின் மகன் முயற்சி செய்கிறார். அப்படி முயற்சி செய்து பார்க்கும் பொழுது இறுதியில்தான் தெரிகிறது பண்ணையார் தன்னுடைய இளமை காலத்தில் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி இருக்கிறார்.

அந்த பெண்ணுக்கு பிறந்த மகன் நான் பண்ணையாரை மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் அறிந்ததும் பண்ணையார் தனது தவறை உணர்ந்து போலீஸிடம் சரண் அடைகிறார். இப்படியான ஒரு கதையை எழுதியிருந்தார் பாக்யராஜ். இந்த கதை சுமாரான ஒரு கதை என்றாலும் முற்றிலும் காதலே இல்லாமல் ஒரு தனித்துவமான கதையாக அப்பொழுதே எழுதியிருக்கிறார் பாக்கியராஜ்.