நீ பேசவே கூடாது – அசலை மிரட்டிய தனலெட்சுமி

தமிழில் பிக் பாஸ் துவங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன. 40 நாட்களில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு நான்கே நாட்களில் சண்டை போட்டு கொள்கிறார்கள் என கமல் கூறியிருந்தார்.

அந்த அளவிற்கு கடந்த இரண்டு வாரங்களாக மிகவும் விறு விறுப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றுக்கொண்டுள்ளது. கடந்த நாட்களில் அதிகமாக சண்டையிட்ட போட்டியாளராக தனலெட்சுமி இருக்கிறார். ஏற்கனவே போன வாரம் இவருக்கும் ஜிபி முத்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று தனலெட்சுமிக்கும் அசலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. ஏதோ கூறுவதற்கு அசல் தனலெட்சுமியை கூப்பிட, கோபத்தில் இருந்த தனலெட்சுமி அசலை கண்ணா பின்னாவென்று திட்ட துவங்கிவிட்டார்.

இந்நிலையில் இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh