Bigg Boss Tamil
உங்க இஷ்டத்துக்கு போட்டி நடத்துன அப்புறம் நாங்க எதுக்கு.. பிக்பாஸ் நிகழ்ச்சியால் கடுப்பான ரசிகர்கள்.. நியாயந்தான?
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை எழுப்பத் துவங்கியிருக்கிறது. இந்த போட்டியில் பலருக்கும் பிடித்த ஒரு போட்டியாளராக சாச்சனா இருந்து வந்தார்.
மகாராஜா திரைப்படத்தில் அவரது ஆசாத்தியமான நடிப்பை பார்த்தது முதலே அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்களிலேயே இளம் போட்டியாளர்களாக சாச்சனாதான் இருந்து வந்தார்.
2k கிட்ஸ் பலருக்கும் சாச்சனாவை பிடித்திருந்தது. அதனால் சாச்சனாவுக்காக பிக் பாஸை பார்க்க துவங்கியிருந்தனர். இந்த நிலையில் முதல் நாளிலேயே எலிமினேஷன் வைத்து அதிலிருந்து சாச்சனாவை நீக்கி இருக்கின்றனர்.
சாச்சனா குறித்து சதி:
இது மக்கள் பலருக்கும் ஆதரித்து ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் இது குறித்து நியாயமான சில கேள்விகளை மக்கள் கேட்க துவங்கியிருக்கின்றனர். பிக் பாஸ் துவங்கும் பொழுது அதில் தீர்ப்பளிக்கும் உரிமை மக்களுக்கு தான் உள்ளது என்று கூறியிருந்தனர்.
நாம் ஓட்டு போடுவதை வைத்துதான் போட்டியாளர்களை போட்டியிலிருந்து நீக்குவார்கள் என்றெல்லாம் கூறிவிட்டு இப்பொழுது அவர்கள் இஷ்டத்திற்கு நீக்குகிறார்கள். அப்புறம் எப்படி மக்களுக்கான நிகழ்ச்சி பிக் பாஸ் என்று கூறுகிறார்கள்.
உண்மையில் இதெல்லாம் பொய்தான் அவர்கள் அவர்களுக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களை நீக்கிவிடுவார்கள் இதுதான் பிக் பாஸின் விதிமுறை என்று கூற தொடங்கி இருக்கின்றனர் பொதுமக்கள்.
