Biggboss tamil: எங்க அப்பாலாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.. வழக்கம் போல சொந்த கதை பேசி கலாய் வாங்கிய நிக்சன்!..

Nixen: பிக் பாஸ் வீட்டிலேயே தற்சமயம் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார் நிக்சனுக்கு முன்பு விஷ்ணு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார்.

ஏனெனில் யோசிக்காமல் பல வார்த்தைகளை வெளியிட்டு விடுவார் விஷ்ணு. இதனால் விஷ்ணுவை கடுமையாக விமர்சித்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் கடந்த இரு வாரங்களாக விஷ்ணு பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டார் என்று கூறலாம்.

ஆனால் நிக்சன் தொடர்ந்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். அதிலும் போனவாரம் அர்ச்சனாவை அவர் மிக மோசமாக பேசியபோது கூட கமல்ஹாசன் அவரை பெரிதாக கண்டிக்காதது ரசிகர்கள் மத்தியிலேயே சர்ச்சையை ஏற்படுத்தியது.

nixen
nixen
Social Media Bar

இதனை அடுத்து கமலை கூட பலரும் விமர்சித்து பேசி வந்தனர். ஏற்கனவே நிக்சன் எங்க ஏரியாவில் நான் ரொம்ப பெரிய ஆளு எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்றெல்லாம் பேசி ரசிகர்களிடம் கலாய் வாங்கி வந்தார். இந்த நிலையில் இன்று அவர் பூர்ணிமா மற்றும் மாயாவிடம் பேசும்பொழுது எங்கள் அப்பா மிகவும் மோசமானவர் இங்க எல்லாம் வந்தார்னா அவ்வளவுதான் என்று பேசிக் கொண்டிருந்தார் நிக்சன்.

அதைக் கேட்டு பூர்ணிமா நீ சொல்றத பார்த்தால் எங்களுக்கே உங்க அப்பா வந்தா பயமா இருக்கும் போலவே என்று கிண்டல் செய்துள்ளார். கிட்டத்தட்ட வெளியில் மக்கள் என்ன மனஓட்டத்தில் இருந்தார்களோ அதை பூர்ணிமா அங்கு வெளிப்படுத்தி இருந்தார் இந்த நிலையில் அந்த வீடியோவும் தற்சமயம்  நெட்டிசன்களிடம் கலாய் விஷயமாக மாறியுள்ளது.