பிக்பாஸ் பார்க்க வந்த சுந்தர் பிச்சை!.. வைரலாகும் வீடியோ!.
Sundar Pichai : பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் கமல்ஹாசன் பேசும்போது கைதட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். இந்த கூட்டம் எங்கிருந்து வருகிறார்கள் எப்படி வருகிறார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் ஒவ்வொரு வாரமும் இப்படி ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். அவர்கள் ஒரு சாராருக்கு கைதட்டுவார்கள் ஒரு சாராருக்கு கைதட்ட மாட்டார்கள் அதை வைத்து பலமுறை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பயந்து இருக்கிறார்கள் என்றும் கூறலாம்.
இந்த நிலையில் அந்த கூட்டத்தில் சுந்தர் பிச்சை, அதாவது கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சையின் முகசாயலில் ஒரு நபர் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த நபர் சுந்தர் பிச்சை தானா என்று கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

இந்த நிலையில் அந்த வீடியோவும் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது உண்மையில் சுந்தர் பிச்சை அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாலும் கூட அது பெரிதாக பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் சுந்தர் பிச்சையை அதிகமானவர்களுக்கு தெரியாது.
அவரது பெயர் தெரியும் என்றாலும் கூட அவரது முகம் எப்படி இருக்கும் என்பதே பலருக்கும் தெரியாது. எனவே அவர் சென்னையில் சாதாரணமாக சுற்றிக் கொண்டிருந்தாலும் கூட கண்டுபிடிக்க முடியாது என்பது ஒரு பக்க வாதமாக இருந்தாலும் அவ்வளவு பெரிய நிறுவனத்தில் அவ்வளவு வேலைகளுக்கு நடுவில் அவர் ஏன் பிக் பாஸ் பார்க்க வர வேண்டும் என்பதும் மற்றொரு கேள்வியாக இருக்கிறது.
எனவே அவர் சுந்தர் பிச்சையாக இருப்பதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான் அந்த சாயலில் வேறு ஒரு மனிதராக அது இயக்கலாம் என்று கூறப்படுகிறது.