இப்படி இரங்கல் தெரிவிக்கிறதுதான் நாகரிகமா!.. சூர்யா செயலால் கடுப்பான ப்ளூ சட்டை மாறன்!..

Actor Surya : கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடே சோகத்தில் மூழ்கும் விதமாக கேப்டனின் இறப்பு பலரையும் பாதித்திருந்தது. இதனையடுத்து பிரபலங்களும் விஜயகாந்தை காண்பதற்காக சென்னைக்கு வந்தனர்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாதிரியான பெரிய நடிகர்களே தங்கள் படப்பிடிப்பு வேலைகளை விட்டு விட்டு கேப்டனை பார்க்க வந்திருந்தனர். ஆனால் இளம் நடிகர்கள் பலரும் நேற்று விஜயகாந்தை காண வரவில்லை. சிவகார்த்திகேயன், அஜித், தனுஷ், சூர்யா, சிம்பு என யாருமே அவரை பார்க்க வரவில்லை.

இவர்கள் அனைவருமே வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கின்றனர். திடீரென இறப்பு நிகழ்ந்ததால் அவர்களால் வந்து பார்க்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதுக்குறித்து நெட்டிசன்கள் கூறும்போது அவர்களது உறவினர்கள் இறப்பாக இருந்திருந்தால் அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வந்திருப்பார்கள்.

Social Media Bar

வர முடியாமல் எல்லாம் கிடையாது. அவர்களுக்கு வர விருப்பமில்லை என பேசி வருகின்றனர். இந்த நிலையில் சில பிரபலங்கள் வீடியோ வழியாக தங்கள் இரங்கலை பதிவு செய்தனர். அதில் சூர்யா வெளியிட்ட வீடியோவால் பிரபல யூ ட்யூப் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறும்போது விஜய்க்கு செந்தூரப்பாண்டி போல உங்களுக்கு பெரியண்ணா திரைப்படத்தில் நடித்து கொடுத்தவர் விஜயகாந்த். நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால் இங்கே வர இயலவில்லை என்கிறீர்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.ஆனால்.. மனிதநேயம் மிக்க மகத்தான கலைஞருக்கு… இப்படி காரில் சென்றவாறே அவசர அவசரமாக அஞ்சலி செலுத்துவது ஏன்?

நீங்கள் தங்கும் அறையில் ஓரிரு நிமிடம் பேசி வீடியோவை வெளியிட்டால் என்ன? அல்லது காரில் ஏறும் முன்போ, பின்போ கூட பேசலாமே? Ethics எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதா? Enjoy the new year.. என்று பதிவிட்டுள்ளார்.