ரசிகர்களுக்குள் சண்டை வர கூடாது! – களத்தில் இறங்கி தடுத்து நிறுத்திய எம்.ஜி.ஆர், சிவாஜி

எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் போட்டி என்பது நிலவி வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜிதான் இதன் துவக்க புள்ளி என கூறலாம். யாருடைய படம் அதிகமாக ஓடி சாதனை படைக்கிறது. யாருக்கு அதிக ரசிகர்கள் என பெரும் போட்டியே நடந்து வந்தது.

ஆனால் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நண்பர்களாகவே இருந்தனர். இப்போதெல்லாம் நடிகர்களின் போட்டிகள் காரணமாக உயிர்பலி எல்லாம் ஏற்பட்டாலும் நடிகர்கள் அதை கண்டுக்கொள்வதில்லை. ஆனால் அப்போது சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அவர்களால் ரசிகர்களுக்குள்ளே சண்டை வர கூடாது என்பதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர்.

ஒரு சமயம் குமுதம் பத்திரிக்கையில் நான் விரும்பும் நட்சத்திரம் என்கிற ஒரு போட்டியை அறிவித்தனர். அந்த போட்டியில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தை கூற வேண்டும்.

இந்த செய்தியை கேட்டதுமே எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே உடனே குமுதத்திற்கு கடிதம் எழுதினர். இந்த போட்டிகள் தேவையில்லாமல் ரசிகர்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிடும். எனவே இந்த போட்டியை உடனே நீக்கவும் என கடிதம் எழுதியிருந்தனர்.

இதையடுத்து இந்த போட்டியானது உடனே ரத்து செய்யப்பட்டது. அந்த அளவிற்கு ரசிகர்கள் சண்டையிட்டுக்கொள்ள கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்துள்ளனர் இருவரும்.

Refresh