News
எல்லாமே ஃப்ரீதான்.. சிம்கார்டே இல்லாமல் பேசலாம்..! அதிரடி தொழில்நுட்பத்தில் இறங்கிய பி.எஸ்.என்.எல்.. ஆடிப்போன ஜியோ, ஏர்டெல்.!
BSNL is already introducing 4G and 5G technologies in India. But beyond that, the facility of making calls without a SIM card is currently being introduced
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல், வி.ஐ மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களுமே தங்களுக்கான ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன.
அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் மற்ற நிறுவனங்களை விடவும் பி.எஸ்.என்.எல் திட்டங்கள் குறைவாக இருக்கின்றன என்று பி.எஸ்.என்.எல்லுக்கு மாற துவங்கினர்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற புதிய திட்டங்களையும் பி.எஸ்.என்.எல் அறிவித்து வந்தது. இருந்தாலும் பி.எஸ்.என்.எல் இன்னமும் அதிவேக 4ஜி மற்றும் 5ஜி இணைய வசதியை வழங்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வந்தது.
புதிய தொழில்நுட்பம்:
அதனை தொடர்ந்து டாடா நிறுவனத்துடன் சேர்ந்து தற்சமயம் 4ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்க துவங்கியிருக்கிறது பி.எஸ்.என்.எல் தொடர்ந்து அடுத்து 5ஜி சேவையையும் அடுத்த வருட இறுதிக்குள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் தனியார் சிம் நிறுவனங்களே ஆடிப் போகும் அளவிற்கான ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம். அதாவது மொபைல் போனில் சிம் கார்டை போடாமல் கால் செய்வது மற்றும் மெசேஜ் அனுப்புவதற்கான ஒரு வசதியை உருவாக்க இருக்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
விரைவில் வெளியாகும்:
இதற்காக வியாசாட் என்கிற ஒரு நிறுவனத்திடம் பேசி வருகிறது bsnl நிறுவனம். அதாவது மொபைல் போனில் எந்த சிம் கார்டும் போடாமல் சேட்டிலைட் உதவியுடனே கால்களை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கான சோதனை ஓட்டத்தை bsnl செய்த நிலையில் அதில் வெற்றியும் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சேவைகள் வரும் பட்சத்தில் அடர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் கூட போன் செய்வதற்கான சிக்னல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தும் நிலையில் தொழில்நுட்பத்தில் அது ஒரு புதிய பாய்ச்சலாக இருக்கும் மேலும் தனியார் நிறுவனங்களுக்கு இது பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.