பயம் காட்டிட்டாங்க பரமா!.. சந்திரமுகி 2 வை விரட்டி அடித்த மார்க் ஆண்டனி!..

News Tamil Cinema News

ரஜினி நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் வசூல் ரீதியாக நல்ல சாதனை புரிந்துள்ளன. அந்த வகையில் சந்திரமுகி திரைப்படத்திற்கும் அதில் முக்கிய இடமுண்டு. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என வெகு நாட்களாக ஆசைப்பட்டார் இயக்குனர் பி.வாசு.

ஆனால் அந்த நேரங்களில் எல்லாம் ரஜினிகாந்திற்கு நேரம் இல்லாமல் போனதால் படமும் தள்ளி சென்றுக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த பி.வாசு சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை நடிகர் லாரன்ஸை வைத்து எடுக்க முடிவெடுத்தார்.

அதன் படி சந்திரமுகியின் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. வருகிற செப்டம்பர் 15 இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு இதன் ட்ரைலரும் வெளியானது. ஆனால் அதே நாளில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலரும் வெளியானது.

மார்க் ஆண்டனி திரைப்படமும் செப்டம்பர் 15 ஆம் தேதியே வெளியாக இருந்தது. ட்ரைலர் வெளியான பிறகு சந்திரமுகி 2 வை விடவும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு வர துவங்கியுள்ளது. இது சந்திரமுகி திரைப்படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சந்திரமுகி 2 திரைப்படத்தை செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.