News
கொரோனாவை விட கொடூர வைரஸா? சீனாவில் பரவும் புது வைரஸால் ஆபத்து உண்டா?
வைரஸ் தொற்று என்பது மனித இனத்தை காலம் காலமாக துரத்தி வரும் ஒரு விஷயமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிதாக வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
ஆனால் ஆய்வாளர்கள் தொடர்ந்து அதற்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்கி அதன் மூலமாக மனித இனத்தை பாதுகாத்து வருகின்றனர். ஆனாலும் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகும் கூட கொரோனா வைரஸின் தாக்கம் என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் பரவ துவங்கியப்போது மனிதர்கள் வெளியில் வரவே பயப்படும் நிலை உண்டானது. சீனாவில் இருந்துதான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.
இந்த நிலையில் தற்சமயம் HMPV எனும் புது வைரஸ் சீனாவில் உருவாகியுள்ளதாக பேச்சுக்கள் இருந்தன. இந்த வைரஸும் கூட கொரோனா வைரஸ் மாதிரியே மூச்சுக்குழலைதான் தாக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் மக்களுக்கு இது அதிக பயத்தை ஏற்படுத்தியது.
மேலும் இது குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோரிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால் சீனாவில் இதுக்குறித்து கூறும்போது இது சீனாவில் குளிர்காலங்களில் வரக்கூடிய வழக்கமான நோய் தொற்றுதான்.
இதன் காரணமாக சளிப்பிடித்தல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.