Connect with us

இன்று ஏழு மணிக்கு மக்கள் என்னை சந்திக்கலாம் – உறுதியளித்த விக்ரம்

Cobra

News

இன்று ஏழு மணிக்கு மக்கள் என்னை சந்திக்கலாம் – உறுதியளித்த விக்ரம்

Social Media Bar

பல வேடங்கள் போட்டு நடிக்கும் நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அந்த இடத்தில் நடிகர் சீயான் விக்ரமிற்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும் என கூறலாம். வரிசையாக ஐ, 10 எண்றதுக்குள்ள, இருமுகன் என வித்தியாசமான கதைகளங்களை கொண்ட திரைப்படங்களை வழங்கி வந்தார் நடிகர் விக்ரம்.

ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் யாவும் மக்களிடையே பெரிதாக பிரபலமாகவில்லை. காரணம் என்னவென்றால் விக்ரம் எப்போதும் வித்தியாசமான கதை களத்தில் வித்தியாசமான வேடத்தில் வருபவர்

. இதனால் ரசிகர்கள் பலரும் அவருடைய படங்களில் அதை எதிர்பார்த்தனர். ஆனால் இருமுகன் திரைப்படத்திற்கு பிறகு வந்த ஸ்கெட்ச், சாமி 2, கடாராம் கொண்டான் போன்ற படங்களில் அவருக்கு அப்படியான வாய்ப்புகள் அமையவில்லை.

தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரமிற்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். ஆனால் பொன்னியின் செல்வனுக்கு முன்பே அவர் நடித்து வெளியாக விருக்கும் திரைப்படமான கோப்ரா படத்திற்கும் மக்களிடையே எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.

இந்த படத்தில் விக்ரம் பல வித வேஷத்தில் வருகிறார்  என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். 2019 இல் படப்பிடிப்பை துவங்கிய கோப்ரா குழு, கொரோனா காரணமாக பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே தனது பணியை முடித்து படத்தை வெளியிட உள்ளனர்.

மேலும் இந்த படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து ஏற்கனவே டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்.

இந்த படம் வருகிற 31 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ரசிகர்களிடம் நேரில் பேச ஆயத்தமாகி வருகிறார் சியான் விக்ரம்.

இதற்காக இன்று 18.08.2022 இரவு 7 மணிக்கு டிவிட்டரில் லைவ் வருகிறார் சியான் விக்ரம். மக்கள் அவரிடத்தில் பேசலாம் என கூறப்பட்டுள்ளது.

Bigg Boss Update

To Top