Cinema History
நான் சொல்றப்படி பண்ணுங்க!.. பத்தே நாளில் படப்பிடிப்பை முடிக்கணும்!.. எம்.ஜி.ஆர் படத்தில் இயக்குனர் செய்த சம்பவம்!..
MGR Movies : தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக இருப்பவர் எம்.ஜி.ஆர். இப்போது வரை மக்கள் மத்தியில் ஒரு ரசிக கூட்டத்தை வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் அரசியல் வாழ்க்கையிலும் கூட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவராக இருந்தார்.
எம்.ஜி.ஆர் உடல் நலமில்லாமல் இருந்தப்போது அவரது ரசிகர்கள் தங்கை கட்டை விரலை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக போட்டுள்ளனர். அந்த அளவிற்கு அவர்கள் எம்.ஜி.ஆர் மீது பெரும் அன்போடு இருந்துள்ளனர். சினிமாவில் பொதுவாக நல்ல கருத்துக்களை கூறும் திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார் எம்.ஜி.ஆர்.
தயாரிப்பாளர் நாகிரெட்டிக்கு எம்.ஜி.ஆர் என்ன மாதிரியான கதையில் நடிப்பார் என தெரியும். எனவே எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை யோசித்தார். ஆனால் எம்.ஜி.ஆர் ஏற்கனவே நிறைய படங்களில் கமிட் ஆகி இருந்தார். இந்த நிலையில் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே ஒரு 15 நாட்கள் அவருக்கு விடுப்பு இருந்தது.
அந்த நாளில் படப்பிடிப்பை முடித்துவிட நினைத்தார் நாகிரெட்டி. இந்த நிலையில் சிபி ஜம்புலிங்கத்திடம் ஒரு நல்ல கதையை எழுதி அதை 15 நாட்களில் படமாக்க வேண்டும் என கூறியுள்ளார் தயாரிப்பாளர். கடினமான காரியம் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டார் ஜம்புலிங்கம்.
இந்த நிலையில் அடுத்து வரும் தேர்தலை முன்னிலைப்படுத்தி எம்.ஜி.ஆருக்கு பிடித்த வகையில் நம் நாடு திரைப்படத்தின் கதையை எழுதிய ஜம்புலிங்கம், எம்.ஜி.ஆர் வருவதற்கும் முக்கால்வாசி வேலைகளை முடித்து வைத்தார். அந்த படத்திற்காக வரிசையாக 14 செட்டுகளை போட்டார் இயக்குனர்.
எம்.ஜி.ஆர் நடிக்க வந்தவுடன் அவரை வைத்து தினமும் 12 மணி நேரம் படப்பிடிப்பை நடத்தினார் ஜம்புலிங்கம். இறுதியில் பத்தே நாளில் படப்பிடிப்பை முடித்தார் ஜம்புலிங்கம். அப்படி பத்து நாளில் உருவான நம் நாடு திரைப்படம் திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது.