புடவையில் இவ்ளோ கவர்ச்சியா? – ஜாக்கெட் போடாமல் ரசிகர்களை திணற வைக்கும் தர்ஷா!

தமிழில் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும் சின்னதிரை நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களிடம் பிரபலமாக இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவி நாடகம் மூலமாக இவர் தமிழ் மக்களிடையே அறிமுகமானார்.

குப்தா என்கிற அவரது பெயரை வைத்து பார்க்கும்போது அவர் வட இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

நாடகங்களில் நடித்து வந்த தர்ஷாவிற்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பலரையும் கவர்ந்தார் தர்ஷா குப்தா. அதன் பிறகு திரை துறையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்சமயம் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் ஓ மை கோஸ்ட் என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் தர்ஷா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. இன்று பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பூங்குழலி போல ஆடையணிந்து அதை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்

Refresh