பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் என்பவை அதிக வரவேற்பை பெற்ற படங்களாக இருக்கின்றன. அதனாலேயே சந்தானம் தொடர்ந்து பேய் படங்களாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்து வரும் திரைப்படம் டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல். ஒவ்வொரு முறையும் சந்தானம் பேய் படங்களில் நடிக்கும்போது பேயாக வருபவர்களே கமெடிதான் செய்துக்கொண்டிருப்பார்கள்.
அப்படியாக இந்த படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடிகர் செல்வராகவன் நடித்துள்ளார். படத்தின் கதைப்படி நடிகர் சந்தானம் ஒரு திரைப்பட விமர்சகராக இருக்கிறார். தொடர்ந்து அனைத்து படங்களையும் விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறார்.
இதனால் கடுப்பான செல்வராகவன், சந்தானத்தை ஒரு பேய் படத்திற்குள்ளேயே அனுப்புகிறார். படத்திற்கு உள்ளேயே இருந்துக்கொண்டு அதை விமர்சனம் செய் என அவருக்கு சாபம் விட சந்தானம் என்ன செய்யப்போகிறார் என்பதே கதையாக இருக்கிறது.
இதன் ட்ரைலர் வெளியான நிலையில் படம் குறித்து எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களுக்கு அதிகரித்து வருகிறது.








